பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்பில்லாத சமுதாயம் எழவுக்;கு ரூபா நூரறில்லே அழுது தொலைச்சேன்" என்று சண்டை பிடித்தான். ஆனால் பலன்? இவனுடைய பிடரியைப் பிடித்துக் காம்பவுண்டுச் சுவருக்கு வெளியே தள்ளிவிட்டதுதான் மிச்சம். ரோட்டில் நின்று கொண்டு வாய்க்கு வந்தவாறு திட்டினான். வாய் சளைத்த பின் மண்ணை வாரி இறைத்து விட்டு நடந்தான். பையிலோ டவுனுக்குப் பட்ஸ்) ஏறக்கூட ஒரு அணுக் கிடையாது. ஒரு பீடி வாங்கக்கூடக் காசில்லை. பைத்தியம் மாதிரிக் கால் நடையாய் நடந்தான். .. ஊருக்குள் நுழைந்தவுடன் குறுக்குப் பாதைக்காக, "அந்தத் தெரு" வழியே திரும்பினான். மனசிலே பழைய நினைவு. முன்னொரு தடவை குடித்துவிட்டு, இந்தத் தெருவிலே மஜா பண்ணிய... 'என்னப்பா, சும்மாப் போரே! வாரியா? ரொம்ப இல்லே ரெண்டு ரூபாத்தான் என்று கூப்பிட்டுச் சிரிப்பது காதில் விழுந்தது.

  • குரல் வந்த திசையில் தலையைத் திருப்பினான். அங்கு

ஒரு 'சரக்கு' நின்றுகொண்டிருந்தது. நெற்றியிலே கால் துட்டு அகலத்திலே கருஞ்சாந்துப் பொட்டு; முகத்திலே பவுடர்; இடதட்டிலே வெற்றிலைக் காவி காதிலே 'சாயம் வெளுக்க ஆரம்பிக்கும் கில்ட். லோலக்; கோணல் வகிடு எடுத்துக் கொண்டை போட்ட கூந்தலில் ஒரு மல்லிகைப் பூ ஆர்ச் ; மார்பில் வரிந்து கட்டிய பாரசூட் சில்க் பாடீஸ்; அந்த மேலாக்கு விலகி... ராமசாமி ஏறிட்டுப் பார்த்தான்; கூர்ந்து பார்த்தான். ' 'என்னப்பா முழிக்கிறே?" என்று கேட்டது அந்தப் பதினெட்டாம்படிப் பதுமை.