பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு முழக் கயிறு இக்டோரியா மியூஸியம் வந்ததும் டிராயை விட்டு இறங்கினேன். இத்தனை நேரமும் ஆபீசுக்குள் வெந்து புழுங்கிய உடலுக்கு, கடற் காற்றாவது ஓரளவு இதம் கொடுக்கும் என்று நினைத்தேன். எனவே வேறு யோசனை எதுவுமின்றிக் கடற்கரையை நோக்கி நடந்தேன். எனக்கு எதிரே, தூரத்திலே தெரியும் கடல் பரப்பின் அடி விளிம்புக்கு மேலே மேலை வானத்தின் செக்கர் ஒன் மட்டுமே மிஞ்சி நின்றது. சூரியன் மேலை நாடுகளுக்கு ஒளி வழங்கப் போய்விட்டான். இருள் படம் விரித்து உலகை விழுங்கத் தொடங்கியிருந்தது. கடலின் அலை வெள்ளம் முழுவதும் ஈயக் கலப்புக்கொண்ட செம்புக் குழம்பு மாதிரி தகதகத்துத் துடித்தது. அந்த ஜோதிப் படலத்தின் முகனே

  • இந்தியாவின் தலைவாசல்' கன்னங்கரிய தாக விளிப்பு கட்டித்

தோன்றியது. அந்தத் தலைவாசலை நெருங்கியதும் கடலை அணைத்துக் கரையாக நிற்கும் சுவரின் மீது உட்கார்ந்து, அந்த வாசலை நிமிர்ந்து பார்த்தேன்.

  • இந்தியாவின் தலைவாசல்- Gateway af India? தல்ல

பெயர். அற்புதமான கட்டிடம்! ஆம் தலைவாசல் தான்! இந்திய மக்கள் வெளி நாட்டாரோடு மேல் திசை மக்களோடு, எகிப்து, இத்தாலி, ஹங்கேரி, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் முதலிய சகல நாட்டு மக்களோடும் கூடிக் குலவுவதற்கு, கலா சாரப் பரிவர்த்தனை செய்வதற்கு, அவர்களது இன்ப துன்பங் களில் பங்கெடுப்பதற்கு... அகில உலக சகோதரத்துவத்துக்