பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

சைவ இலக்கியவரலாறு

 {{hws|அவர்|அவர்கட்குத்}] அவர்கட்குத் தூநெறியாகிய சிவநெறி எளிதில் கைகூடுமென [1] ஞானசம்பந்தர் வற்புறுத்துகின்றார்,

<bதொல்லிலக்கியக் குறிப்புக்கள்b/>

ஞானசம்பந்தர் வழங்கியுள்ள திருப்பதிகங்களில், சங்க நூற் கருத்துக்களும் திருக்குறட் கருத்துக்களும் ஆங்காங்கு நின்று ஒளிர்கின்றன. "கெண்டை பாய்தர ஆவிழ்ந்த வண்டுபிணி ஆம்பல் நாடுகிழவோனே" [2] என்பது ஐங்குறு நூற்றிற் காணப்படும் பகுதி : இது திருக்கேதாரப் பதிகத்தில், "வண்டுபாட மயிலால மான் கன்று துள்ள வரிக்கெண்டை பாயச் சுனைநீலம் மொட்டு அலரும் கேதாரம்மே”.[3] என அமைந்து விளங்குகிறது. “சலத்தாற் பொருள் செய்து ஏமார்த்தல் பசுமண் கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று"[4] என்பது திருக்குறள். இது, திருவோமாம் புலியூர்ப்பதிகத்தில், "சலத்தினாற்பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையான் மிக்க, உலப்பில் பல்புகழார்" [5] என்பதன்கண் கிடந்து ஒளி செய்கிறது. -

திருக்கோயில்கள்

ஞானசம்பந்தர் காலத்தே தமிழ்நாட்டுச் சிவன் கோயில்கள் சிலவற்றில் மலையாள நாட்டிலிருந்தும் வேறு பிற நாடு களிலிருந்தும் அந்தணர்களும் பிறரும் வந்து வழிபாடு செய்திருக்கின்றனர். திருப்பழுவூரில் பத்தரும் சித்தரும் மறையவரும் மகளிரும் வழிபடும் திறத்தைக் கூறும் ஞான சம்பந்தர், "அந்தணர்களான மலையாளவர் "[6] ஏத்தும் இயல்பையும் எடுத்துக் கூறுகின்றார், சைவத்தின் உட் கூறுகளான அறுவகைச் சமயத்தவரது வழிபாடும் [7]அவரால் குறிக்கப்பெறுகிறது.


  1. ஞானசம் 240:10
  2. ஐங்குறு.40
  3. ஞானசம் 250:1
  4. குறள் .660
  5. ஞானசம் 380:5
  6. ஞானசம் 170:11
  7. ஞானசம் 337:6