பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருஞானசம்பந்தர்

97



உள. இவ்வாறே உண்ணென்பதன் அடியாக உண்ட உண்கின்ற, உண்கின்ற என்ற வாய்பாட்டிற்பெயரெச்சங்கள் தோன்றி வழங்குவது பெருவழக்கு .திருஞானசம்பந்தர் உண்னென்னும் வினையடியாக உண்ணி யென்றொரு வினைப்பெயரை வினைமுதன்மேல்வரப் படைத்து, "இடுபலி உண்ணி" என்றும் உண்டவெனும் பொருள் படுமாறு உண்ணியவெனப் பெயரெச்ச மொன்றைப் படைத்து, "இருங்களம் ஆரவிடத்தை இன்னமுது உண்ணிய ஈசர்" 2 என்றும் வழங்குகின்றார் . "உண்பு நீங்கி வானவரோடு 'உலகில் உறைவார்"3 என்றவிடத்து உண்பு என்பதும் ஞானசம்பந்தர் புதிது படைக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றுதல் என்பதன் மறுதலையாக அன்றுதல் எனத் தெரிநிலை வினையொன்றைப் பிறப்பித்து “அன்றி நின்ற அவுணர்“4' “அன்றிய அமணர்கள்”5 “அன்றினர் அரி யென வருபவர்” 6 என வேறுவேறு வகையாக வழங்குவர். கணையென்னும் பொருட் பெயரைக் கணையைத் தொடுத்தான் என்னும் பொருள்பட வினைப்படுத்து “எயில் மூன்றும். எரியுண்ணக் கணையல் செய்தான்”’ 7 எனவும் நீளுதல் என்னும் பொருளில் “நீணுதல்” 8 எனவும் வந்தனையை "வந்தனம்"9 எனவும், நல்லுலகு என்பதை “நன்னுலகு” 10 எனவும், நடுநடுங்கியெனவரும் அடுக்கினை “நடுநடுத்து”11எனவும் கைதை வேலியைக் “கைதல் வேலி” 12 எனவும், வேள்வியை “வேழ்வி”13 எனவும், “துறவைத் துறவி” 14, எனவும், பிறவி, இறப்பு என்பனவற்றைப் “பிறவினோடு, இறவுமானான்” 15எனவும் வழங்குகின்றார்.


|-

1. ஞானசம். 40:9 2. ஞானசம். 43:4- 3. ஞானசம் 49:11 | 4. ஞானசம் 29:7

5.ஞானசம் 113 : 10. |

6. ஞானசம் 124 : 6. 7. ஞானசம் 106 : 4. | 8. ஞானசம் 1 :9 9. ஞானசம் 126 : 3. || 10. ஞானசம் 136 : 11 11. ஞானசம் 224 : 8. || 12. ஞானசம் 252 : 7. 13. ஞானசம் 230 : 8. || 14. ஞானசம் 01 : 2. |5. ஞானசம் 110 : 1. || -