பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

சைவ இலக்கிய வரலாறு

சம்பந்தரைத் திருஞானம் பெற்ற ஆளுடைய பிள்ளை என்பதுபற்றி அவர் திருப்பதிகங்களை மாத்திரம் திருஞானம் எனவும் போற்றிப் பரவினர்,

வடமொழியில் காணப்படும் நான்மறைகள் போல, ஞானசம்பந்தர் முதலியோர் வழங்கிய திருப்பதிகங்கள் சைவக் கோயில்களில் வைத்து ஒதப்பட்டன.[1] வடமொழி வேதங்களை ஒதுவதற்குக் கோயில்களில் நிவந்தங்கள் விடப்பட்டது போல, இத் திருப்பதிகங்களை ஒதுவதற்குப் பல்லவ வேந்தர் காலத்தேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டன.[2]

திருஞானசம்பந்தரும் கல்வெட்டுக்களும்

திருஞானசம்பந்தர் திருப்பதிகங்களிலும், அவரைப் பாராட்டிக் கூறும் ஏனைத் தமிழ் நூல்களிலும் போலத் தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்களில் அவர் பெயர்கள் பல வேறுவகையில் வியந்து குறிக்கப்படுகின்றன. கல்வெட்டுக்களெல்லாம் பெரும்பாலும் இடைக்காலமக்களுடைய உலகியல் வழக்கு நிகழ்ச்சியாதலால், இவற்றால் குறிக்கப்படும் ஞானசம்பந்தர் பெயர்வழக்கு உலகவழக்கெனக் கருதவேண்டும். ஆளுடைய பிள்ளையார்.[3] திருஞானம் பெற்ற பிள்ளை[4] காழிநாடுடைய பிள்ளை[5] சம்பந்தப் பெருமான்[6] பரசமய கோளரி[7] திருஞானசம்பந்தடிகள்[8] காழிச் சம்பந்தப் பெருமாள் நாயனார்[9] திருஞானசம்பந்தப்பெருமாள்[10]' சிவஞான சம்பந்தடிகள் [11] திருஞானசம்பந்த


  1. 1. பதினாறாம் நூற்ருண்டிலேயே இத்திருப்பதிகங்களைத் திராவிட வேதம் என வழங்கும் வழக்கம் இருந்ததென நாகலாபுரத்து வேதாரணியேச்சுரர் கோயில் கல்வெட்டொன்று (A. R. No. 627 of 1904) கூறுகிறது
  2. 2. K. A. N. Sastry’s Cholas. Vol. II. p. i. Lá. 476-7,
  3. 3. A. R. No. 114 of 1908.
  4. 4. A. R. No. 216 of 1908.
  5. 5. S. I. I. Vol. VII. No. 785.
  6. 6. A. R. No. 52 of 1916
  7. 7. A. R. No. 534 of 1918
  8. 8. A. R. No. 37 of 1920.
  9. 9. A. R. No. 48 of 1922.
  10. 10. A. R. No. 145 of 1927.
  11. 1 1 . S. I. Ins. Vol. VIII. No. 613. -