பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

சைவ இலக்கிய வரலாறு

திருநாட்டியத்தான்குடிக் கோட் புலியாருடைய மக்களான வனப்பகை, சிங்கடி என்ற இரு பெண்களையும் நம்பியாரூரர் தம்முடைய மக்களாகக் கருதிய கருத்தும், திருமுது குன்றில் இறைவன் தமக்குப் பொன் உதவிய குறிப்பும் பிறவும் அவருடைய திருப்பதிகங்களில் ஆங்காங்குக் காட்டப்பட்டுள்ளன. சங்கிலியாரைத் திருவொற்றியூரில் திருமணம் செய்து கொண்ட செயலே, "திருவொற்றியூர் புக்குச், சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்றாள்"[1] என்றும், சங்கிலியார்க்குச் செய்த சூளுறவை மறந்து திருவாரூர்க்குச் செல்வாராய்த் திருவொற்றியூர் எல்லை கடந்ததும் கண்ணொளி மறைந்ததை, "தண்பொழில் ஒற்றி மாநகருடையாய் சங்கிலிக்காக என்கண் கொண்ட பண்பனே [2]" என்றும், ஊன்றுகோல் பெற்றதை, "ஊன்றுவதோர் கோல் அருளி உளோம் போகீர் என்றானே"[3] என்றும், கச்சி மாநகர்க்கண் கண் ஒன்று பெற்ற திறத்தை, "கால காலனைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே"[4] என்றும், திருவாரூரில் மற்றைக் கண்ணை வேண்டிப் பெற்ற குறிப்பை, "பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்"[5] என்றும், அவிநாசியில் முதலையுண்ட பாலனை உயிர்த் தெழச் செய்த நிகழ்ச்சிக் குறிப்பை, "காரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே"[6] என்றும் கயிலை செல்வதற்கு வெள்ளானையை இறைவன் அருளின அருட்செயலே, விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளே யானையின் மேல், என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான் மலே யுத்தமனே என்றும் குறித்துள்ளார். இவ்வகையே நோக்கின், இவருடைய திருப்பதிகங்கள் பலவும் இவருடைய வரலாற்றுக் குறிப்புக்கள் செறிந்தவை என்பது இழுக்காது.


  1. 1. சுங். தே. 45 : 4.
  2. 2. சுங். தே. 69 : 3.
  3. 3. ௸ 89:10
  4. 4. ௸61:1
  5. 5. ௸ 65:11
  6. 6.௸ 92:4