பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:250

 சேரமான் திருவாரூரில் தங்கி இறைவனை மும்மணிக் கோவை பாடி வழிபட்டார். சில நாட்களுக்குப் பின் சேரமானும் நம்பியாரூரரும் பாண்டிநாடு சென்று இறைவன் திருப்பதிகளைக் கண்டு பரவும் கருத்துடன் திருமறைக்காடு அடைந்து இறைவனை வழிபட்டனர் : அப்போது சேரமான் தான் முன்பு பாடிய பொன் வண்ணத் தந்தாதியையே திரும்பவும் பாடிச் சிறப்பித்தார்1[1] மதுரையில் பாண்டி வேந்தனும் அவன்'மகளை மணந்து ஆங்கிருந்த சோழ வேந்தனும் இருவரையும் வரவேற்றுச் சிறப்புப் பல செய்தனர். சோழ பாண்டிய வேந்தரும் நம்பியாரூரரும் வரச் சேரமான் திருப்பரங்குன்றம் முதலிய திருப்பதிகளைக் கண்டு வழிபட்டார். பின்பு அவ் வேந்தர்பால் விடைபெற்றுக் கொண்டு நம்பியாரூரருடன் திருவாரூர் வந்து சில நாள் தங்கினர். பின்னர் நம்பியா ரூரரை உடன் அழைத்துக் கொண்டு சேரநாடு சென்று சேர்ந்தார். - நம்பியாரூரர் சேரநாட்டிற் சில நாள் தங்கித் திருவஞ்சைக் களத்து இறைவனை வழிபட்டு இன்புற்றார். அதன்பின் ஆரூரர், சேரமான் தந்த மிக்க பொன்னையும் பொருளையும் பெற்றுப் பிரியா விடைகொண்டு திருவாரூர் வந்து வாழ்ந்திருந்தார். சில காலம் கழிந்த பின் நம்பியாரூரர் தானே கொடுங் கோளுர்க்கு வந்து சேரமானைக் கண்டு திருவஞ்சைக் களத்து இறைவனை வழிபட்டு இன்புற்றார் .சேரமான் விரும்பியவாறு அங்கிருந்து கொண்டு நம்பியாரூரர் இறை னைப் பாடிப் பரவி வந்தார். இவ்வாறிருந்து வருகையில் நம்பியாரூரர்க்கு இறைவன் வெள்ளையானை யொன்றை விடுத்துத் தனது கயிலைக்கு வருமாறு பணித்தார். நம்பி யாரூரர் கயிலை செல்லும் செலவைச் சேரமான் உணர்ந்து தனது குதிரையேறி அவ்வெள்ளை யானையுடன் கயிலை சென்றார். அங்கே, இறைவன், சேரமானை நோக்கி, "யாம்- ______________________________

1. பெரியபு. கழறிற். "அருட்சேரர் சிறந்த அந்தாதியிற் சிறப்பித்தனவே யோதித் திளைத்தெழுந்தார்"(87) என்று சேக்கிழார் கூறுவது காண்க.


  1. பெரியபுரா.கழறிற்.87 அருட்சேர் சிறந்த அந்தாதியிற் சிறப்பித்தனவே யோதித்திளைத்தெழுந்தார் என்றுசேக்கிழார்கூறுவதுகாண்க