பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:252

 தான், சேரவரசுக்கு உரியாரைத் தேர்ந்து கோடல் அரசியலமைச்சர் கடனாயிற்று. இவ்வாறு அரசரைத் தேர்ந்து கொள்ளும் முறை பிற்காலத்தும் சேரநாட்டில் பெரு வழக்காக இருந்திருக்கிறது1.[1] சேரவேந்தர் தம் இறுதி நாளில் துறவு மேற்கொள்ளும்மரபுபிற்காலத்தும் இருந்துளது.2”[2] செங்கோற் பொறையனுக்கு முன்னர் ஆட்சி புரிந்த சேரவேந்தர் பெயர் தெரிந்திலது. சங்க காலச் சேர மன்னர்களில்மாக்கோதையென்று பெயர் கொண்டோன் ஒருவன் உளன்.அவன்கோட்டம்பலமென்னுமிடத்தே உயிர் துறந்தது பற்றி அவனைச் சான்றோர் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையென்று வழங்கினர். நம் கழறிற்றறிவார்க்குப் பெருமாக்கோதையென இயற் பெயர் கூறப்படுதலின், இவர் சங்க காலத்து மாக்கோதையின் வழி வந்தவர் என்பது இனிது விளங்குகிறது. அம் மாக்கோதையின் வேறுபடுத்தவே கழறிற்றறிவார் பெயர் பெருமாக்கோதையார் எனப்பட்டது. கேரளோற்பத்தி கேரளமான்மியம் என்ற நூல்கள் வரலாற்றாராய்ச்சிக்குப் பயன்படாத பொய்யும் புனைசுருட்டும் நிரம்பியவை3[3]ஆதலால்,அவற்றின் கண் இக் குறிப்புக்கள் காணப்படவில்லை -

 திருவஞ்சைக் களம் என்னும் கோயிலிருக்கும் நகரப் பகுதி மகோதையெனப்படும்:4[4]இதன் பெயர்க் காரணம் கூறும் சேக்கிழார்," வளநகர்தான் கோதையரசர் மகோதை யெனக் குலவுபெயரும் உடைத்துலகில்"5[5] என்று கூறுகின்றார். இது சங்ககாலத்து மாக்கோதை வேந்தன் பெயரைத் தொடக்கத்தே தாங்கியிருந்து நாளடைவில் மகோதையென மருவிற்றெனக் கொள்ளப்படுகிறது. இதுவே பின்னர் மகோதையார் பட்டினமென்ற பெயரால்,

1. Logan's Malabar, p. 167.

2. T. A. S. Vol. II. page 11.

3. W. Logan’s Malabar. p. 246. and Tra. S. M. Vol. II. p. 44.

4. "கடலங்கரைமேல் மகோதை யணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே" -சுந். தே. 4 : 1.

5. பெரியபு. கழறிற். 4.


  1. Logans Malabar p.167
  2. T.A.S.Vol.IIp11
  3. W.Logans malabarp.246andTra.S.M.Vol.II p.44
  4. "கடலங்கரைமேல்மகோதையணியார்பொழில்அஞ்சைக்களத்தப்பனே" சுந்.தே. 4:1
  5. பெரியபு.கழறிற்.4