பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:254


பெருமாக் கோதையார் சேரவேந்தனாய்த் திருமுடிசூடிக் கொண்டு திருவுலா வந்தபோது வண்ணாணொருவன் தன் மேனி முழுதும் தான் சுமந்து வந்த உவர்மண் தோய்ந்து வெளுத்துத் தோன்றக்கண்டு அவனை முழு நீறுபூசிய முனிவர் எனக் கருதி அவன் அடியில் வீழ்ந்து வணங்கினர் என்பது வரலாறு. இதனால்சேரமானைப் பிற்காலத்தார் < bவண்ணானைக் கும்பிட்டார்/b> என்று சிறப்பித்துப் பேசினர். இவருடைய வரலாறு உணர்ந்தோர் மக்கட்கு வண்ணானைக் கும்பிட்டார் என்று பெயரிட்டுப் பேணினர். சேலம் மாவட்டத்துத் தருமபுரி முன்னாளில் தகடூரென்றும், அதனைச் சூழவுள்ள நாடு தகடூர் நாடென்றும் வழங்கின. தகடூரில் சாணாயிர முழமாயிர முடையார் கோயில், திருவேளாவி யீச்சுரமுடையார் கோயில், ஒராயீரேச்சுர முடையார் கோயில் என மூன்று கோயில்கள் இருந்தன. அவை ஒரு கால் பூசையின்றிப் பொலிவுகுன்றி இருக்க, அங்கே வந்த ஆண்டார் வண்ணானைக் கும்பிட்டார் என்னும் ஒரு சான்றோர், தகடூர் வேந்தனை அதியமானுக்குக்காட்டிச் சிவப் பிராமணரைக்கொண்டுநாட்பூசனை நடக்கச்செய்தல்வேண்டும் என உரைப்ப, அதியமான் அவரையே தக்க சிவப்பிராமணரைத் தேர்ந்து "கொடுவர" வேண்டுமென்றான் : அவரும் அவ்வண்ணமே சிவப்பிராமணனைக் "கொடுவந்து"வேந்தன் முன் நிறுத்தினர். வேந்தன் அச்சிவப் பிராமணனுக்குச் சிவ வழிபாடுசெய்யும் வாய்ப்பும், காணியுரிமையும் தந்தான்.1 [1]

 இரண்டாண்டிற்குப் பின் அதியமானுக்கு நலம் விளைதல் வேண்டி, அதியமான் அடியான் பம்ம ராகுத்தனை புலியூர் கிழவன் தம்பிரான்தோழன் என்னும் குதிரைப்படைத் தலைவன் மேலே கூறிய கோயில்களைச் செம்மைசெய்து "திருப்பிரதிட்டையும் திருப்புதுக்குச் சாந்தும்" செய்வித்தான் என்று அங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவற்றால் தம்பிரான் தோழரான நம்பி யாரூரர் வரலாறும் வண்ணானைக் கும்பிட்டார் என்ற கழறிற்றறிவார் வரலாறும் இடைக்காலத்தே கொங்கு

______________________________

1. S. I. I. Vol."Vis. No. 533.


  1. S.I.I.Vol.VIINo.533