பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

255

சேரமான்பெருமாள்


நாட்டில் சிறப்புறப் பரவியிருந்த திறம் வெளியாகிறது. சேரமான் நாடோறும் தன் வழிபாட்டின் இறுதியில் இறைவனுடைய திருவடிச் சிலம்போசையைக் கேட்பது வழக்கம் என வரலாறு கூறுகிறது. சேக்கிழாரும், நீடும் உரிமைப் பேரரசால் நிகழும் பயனும் நிறைதவமும், தேடும் பொருளும்பெருந்துணையும் தில்லைத்திருச்சிற்றம்பலத்துள் ஆடுங்கழலே'1[1] என்று வழிபடுவதும், அதன் சிலம்போசை கேட்பதுமே யல்லாது ' "ஆசையுடம்பால் மற்று இனிவேறு அடையும் இன்பம் 2"பிழை காட்டு: Closing </ref> missing for <ref> tag என்று விளக்கிக் கூறுகிறது.

  சேரமானும் நம்பியாரூரரும் திருவாரூரினின்றும் புறப் பட்டுச் சேரநாடு நோக்கி வருகையில் திருக்கண்டியூர் வந்ததும் திருவையாறு தோன்றக்கண்டு ஐயாறப்பனைக்கண்டு பரவ வேண்டும் எனச் சேரமானுக்கு விருப்பமுண்டாகவே, காவிரி பெருகி இருகரையும் புரண்டு செல்வது தடையாயிற்று, நம்பியாரூரர் பரவும் பரிசொன்றறியேனுன்"4 [2]எனத்தொடங்கும் திருப்பதிகம்பாடவும் ஆறு வழிவிட்டது. இருவரும் சென்று ஐயாற்று அண்ணலைக் கண்டு அன்புடன் பரவிச் சென்றார்கள் என்பது வரலாறு. திருக்கண்டி

_____________________________

1. பெரிய பு. கழறிற். 23.
2. பெரிய பு. கழறிற்ம. 42. 
3. கல்லாடம் அகவல், 11.

4. சுந். தே. 77. -


  1. பெரியபு.கழறிற்23
  2. சுந்.தே.77