பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புரு:262

இதன்பின் எண்பது பாட்டுக்கள் பாடுகின்றார் , பின்பு சேரமானுக்குச் சிறிது சோர்வு தோன்றுகிறது. அப்போது அவர், "ஈசனவன் பெருமை, தேன் அலர்த்தாமரையோன் திருமாலவர் தேர்ந்து உணரார், பாலத்தால் கவி யாம் எங்ஙனே இனிப்பாடுவதே1[1] என்று பரிகின்றார்,

திருத்தொண்டு ஈடுபாடு

கருவி கரணங்களை இறைவன் திருத்தொண்டில் ஈடுபடுத்திப் பிறவிக்கு ஏதுவாகிய மலகன்மங்களினின்றும் நீங்குதல் வேண்டும் என்பது சிவநெறி அணைந்தோரது சீர்த்த கொள்கை. உலக நுகர்ச்சிகட்கு எளிய வாயில்களாகத் திகழும் மனம் முதலிய கரணங்களையும் கண் காது முதலிய கருவிகளையும்அடக்கி ஒரு நெறிப்படுத்திச் சிவ வழிபாட்டில் செலுத்தியவழி வினை பெருகாது ஞானம் பெருகும்; மலம் தேயும் என்று அறிவு நூல்கள் அறையா நிற்கும். அதனால் இறைவழிபாட்டைப் பெரிதும் விரும்பி அதன்கண் ஒன்றியிருக்கும் தனது செயலைச்,

"சிந்தனை செய்ய மனம் அமைத்தேன். செப்ப நாஅமைத்தேன்; - வந்தனை செய்யத் தலையமைத்தேன் ; தொழக்கையமைத்தேன். ' . - பந்தனே செய்வதற்கு அன்பமைத்தேன் ; மெய் அரும்பவைத்தேன் - வெந்த வெண்ணீறு அணி ஈசற்கு இவை

யான் விதித்தனவே"2[2] என்று கூறி நம்மையும் அது செய்யுமாறு பணிப்பாராய், "கூறுமின் ஈசனே செய்ம்மின் குற்றேவல்; குளிர்மின் கண்கள் ; தேறுமின் சித்தம், தெளிமின் சிவனே செறு மின் செற்றம் ; ஆறுமின் வேட்கை; அறுமின் அவலம் : இவை நெறியா ஏறுமின் வானம், இமையவர்க்கு விருந்தாய் இருமின்"3[3] என்று அறிவுறுத்தி வற்புறுத்துகின்றார்.

1. பொன் வண். 89. 2. பொன். அங். 92. 3. ,ை of Q.


  1. பொன் வண்.86
  2. பொன்.அந்.-92
  3. பொன்.அந்.70.