பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

 களும் கோட்டைக்கருங்குளத்துக் கல்வெட்டுக்களும் குறித்தலால், அரிகேசரிச்சுரம் - எனப்படுபவை: இராசசிம்மனுக்குப் பாட்டனும் நெல்வேலிச் செருவென்ற நின்ற சீர்நெடுமாறனுமாகிய மாறவன்மன் அரிகேசரியால் எடுக்கப்பட்டனவாதல் வேண்டும்; அல்லது, அவன் மகன் நெடுஞ்சடையனான இரண தீரனால் தந்தைபெயரால் எடுக் கப்பட்டனவாதல் வேண்டும். . மேலும், இடைக்காலப்பாண்டியர்களால் சீர்த்த கர்ப்பமைந்த கடிநகரமாய்ச் சிறப்பாய்ப் போற்றப்பெற்றது களக்குடியான கரவந்தபுரமாகும். நெடுஞ் சடையனை ப்ராந்தகன் வேள்மன்னனை வென்று பெற்ற பொன்னும் பொருளும் கொணர்ந்து,"பொன்மாட நெடுவிதிக் கரவந்தபுரம் பொலிவெய்தக் கண்ணகன்ற தோர் கல்லகழோடு விசும்பு தோய்ந்து முகில் துஞ்சலின் அசும்பறாத அகன் சென்னி நெடு மதிலை வடிவமைத்தும்" சிறப்பித்தான் என அவனுடைய செப்பேடுகள் கூறுகின்றன. இவ்வாற்றால் கலைவளம் செறிந்த பெருநகராய் விளக்கமுற்ற கரவந்தபுரத்து அரிகேசரீச்சரத்தையே ஈண்டுத்திருவாதவூரடிகள் இருவுள்ளத்திற் கொண்டு, அரிகேசரீச்சுரமுடைய சிவ பெருமானைக் "கலையார் அரிகேசரியாய் போற்றி" என்றார் என்று கோடல் சீரிதாம். . . . இனி இடைக்காலப் பாண்டிவேந்தருள் வரகுணன் என்ற பெயருடையார் இருவர் உள்ளனர் ஒருவன் இரண்டாம் இராசசிம்ம பாண்டியனுக்கு மகனவன்; அவனைச் சின்ன மனூர்ச் செப்பேடுகள் "கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராசன்" என்று புகழ்ந்து கூறுகின்றன: இவனை முதல் வரகுணன் என்றும் இவன்காலம் கி. பி.792 முதல் 835 என்றும் திரு. சதாசிவபண்டாரத்தார் முதலி யோர் கூறுகின்றனர். மற்றவனை இரண்டாம் வரகுணன் என்றும் அவன்காலம் கி. பி. 862 முதல் 880 என்றும் கூறுகின்றனர். அவன் முதல் வரகுணனுக்குப் பெயரனும் சீமாறன் சீவல்லபனுக்கு மகனுமாவான். அவனைச் சின்னமனூர்ச் செப்பேடுகள், ' குரைகழற்கால் அரசு இறைஞ்சக் குவலயதலம் தனதாக்கின, வரைபுரையும் மணிநெடுங்