பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

317


பதிகத்தையும், தில்லைக்குச் சென்று கண்டபத்து, குலாப் பத்து, கோயிற்றிருப்பதிகம், கோயின்மூத்த திருப்பதிகம், இத்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திரு வருவல் என்பனவற்றையும், நகரில் மகளிர் பொற் கண்ணம் இடிப்பது கண்டு அம்முறையில் திருப்பொற் சண்ணம் என்னும் பதிகத்தையும், பின்னர், திருத்தெள்ளேனம், திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருப்பூவல்லி, திருப்பொன்னூசல், அன்னைப்பத்து, திருக்கோத் தும்பி, குயிற்பத்து, திருத்தசாங்கம், அச்சப்பத்து என்பவற்றையும் பாடினர் என்றும், ஈழவேந்தன் மகளைப் பேசு வித்த காலையில் திருச்சாழல் பாடினரென்றும், பின்னர், திருப்படையாட்சி, திருப்படையெழுச்சி, அச்சோப்பத்து, யாத்திரைப்பத்து ஆகியவற்றைப் பாடினரென்றும் திருவாதவூரர் புராணம் கூறுகிறது.

இனி, திருவாலவாயுடையார் புராணம், அடிகள் திருப்பெருந்துறையில் ஞானகுரவரைக் கண்டு அவரது ஞானவுரை கேட்டு வணங்குகையில், அவர் பாடுமாறு ஆணையிடவும், அடிகள், அற்புதப்பத்து, சென்னிப்பத்து அச்சோப் பத்து என்ற மூன்றையும் பாடினரெனவும், ஞானகுரவர் அடிகட்கு ஏனையடியார்களேச் சுட்டிக்காட்டிய காலத்தில், அதிசயப் பத்தைப் பாடினரெனவும், ஞானகுரவர் அடியார்களோடு மறைந்த காலத்தில், கோயிற்பத்து, புணர்ச்சிப் பத்து, செத்திலாப்பத்து பிரார்த்தனப்பத்து ஆசைப் பத்து உயிருண்ணிப்பத்து திருப்புலம்பல் வாழாப்பத்து எண்ணப்பத்து என்ற பதிகங்களைப் பாடினரெனவும், திருப்பெருந்துறை நகர்க்கண் நிகழ்ந்த காட்சிகளைக் கண்ட அடிகள், திருவம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருவெம்பாவை, திருச்சதகம் என்ற இவற்றைப் பாடினரெனவும், பாண்டியன் விடுத்த ஒலை கண்ட அடிகள் திடுக்கிட்டுப் பெருந்துறைக் கோயிலுக்குட்சென்று இறைவன் திருமுன் நின்று திருப்பள்ளியெழுச்சி பாடிரெனவும், மதுரையில் பாண்டியனால் சிறையிடப் பெற்ற போது சிறைக் கோட்டத்துக்கு உள்ளி