பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

339

மாணிக்கவாசகர்

 திருவாசகம் திருக்கோவையார் என்ற இரு நூல்களாலும், அடிகள் அண்ணாமலை, அம்பர், ஆரூர், இடைமருது, இடவை, ஈங்கோய்மலை, உத்தர கோசமங்கை, ஏகம்பம், ஐயாறு, ஒரியூர், கடம்பூர் (கடம்பை), கல்லாடம், கழுக்குன்று, கழுமலம், காழி, குற்றாலம், கூடல், கொடுங்குன்றம், கோகழி, சந்திரதீபம், சாந்தம்புத்துர், திருப்பூவணம், திருவாஞ்சியம், தில்லை, துருத்தி, தேவூர், கந்தம்பாடி, பஞ்சப்பள்ளி, பட்டமங்கை, பரங்குன்றம், பனையூர், பாண்டூர், பாலையூர், புறம்பயம், பூவலம், பெருந்துறை, பொதியில், மகேந்திரம், மூவல், வாதவூர், வெண்காடு, வேலம்புத்தூர் முதலிய திருப்பதிகளைக் குறிக்கின்றார். இவற்றுள் மகேந்திரம்1, கோகழி 2[1] என்பவை தெலுங்கு நாட்டில் உள்ளன. பஞ்சப்பள்ளி மத்திய மாகாணத்தில் (வச்ச நாட்டில்) உள்ளது".3[2]

<bபண்டை நூற் கருத்துக்கள்/b>

திருவாதவூரடிகள் பாண்டி வேந்தன்பால்அமைச்சராயிருந்தார் என்ற வரலாற்றுக் குறிப்பே, அவர் அந்நாளில் பரந்த கல்விகேள்வியுடையராய் விளங்கினர் என்பதை வற் புறுத்துகிறது. அடிகள் பாடிய நூல்கள் இரண்டினும் வட நூற் கருத்துக்களும் பழைய தமிழ்நூற் கருத்துக்களும் மிடைந்திருப்பதால் அவர் இரு மொழியிலும் வல்லுநர் எனத் தெரிகின்றோம். ஆகமப் பொருளைப் பன்முறையும் எடுத்துக் கூறுதலால், அடிகள் சமய நூல் ஆராய்ச்சியில் தலைசிறந்து விளங்கினவரென்று நன்கு அறியலாம்.

அடிகள் காலத்திலும் அதற்கு முன்னும் நம் காட்டில் நான்கு சமயங்கள் மடங்களை நிறுவிச் சிவநெறியைப்

1. S. I. I. Vol. V. No. 1351. 2. இது கோகழியைஞ்னுாறு எனக் கல்வெட்டுக்களில் வழங்கு கிறது . இது தெரியாமையால் சைவ பெளராணிகர்கள் திருவா வடுதுறை எனக் கூறி யொழிந்தனர். திருக்கோயில்களின் தூய தமிழ்ப் பெயர்களே வடமொழியில் மாற்றிய காலத்தில் இன்னுேரன்னவை கற்பிக்கப்பட்டன.

3. பிற்காலச் சோழர் சரித்திரம். பக். 156.


  1. இதுகோகழியைஞ்ஞூறு எனக்கல்வெட்டுக்களில்வழங்கப்படுகிறதுஇதுதெரியாமல்சைவப்பௌராணிகர்கள்திருவாதிரைஎனக்கூறியொழிந்தனர். திருக்கோயில்களின்தூயதமிழ்ப்பெயர்களைவடமொழியில்மாற்றியகாவத்தில்இன்னோரன்னவை கற்பிக்கப்பட்டன
  2. பிற்காலச்சோழர்சரித்திரம் பக்.156