பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 சைவ இலக்கிய வரலாறு

விடுதி கண்டாய் ' என்று விளம்புகின்ருர், இ.து"எருக்கு மறைந்து யானே பாய்ச்சிவிடல்" என்னும் பழமொழியை நினைப்பிக்கின்றது. எருக்கு, எருக்கின் தூறு. யானே வெகுண்டுவரின் எருக்கின் குறுந்துறு அரணுகாது என் பதையே இப்பழமொழியும் விளக்குகின்றது.

இனி, இறைவன் உலகுயிர்களிற் கலந்திருக்கும் இருப் பைத் திருஞானசம்பந்தர், பூவினில் வாசம் புனலிற் பொற்புப் புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு நாவினிற் பாடல் நள்ளாறுடைய நம்பெருமான் ' என்றுகூறினராக, "பூவினில் வாசம்' என்ற கருத்தைத் திருவாதவூரடிகள், "உற்ற யாக்கையின் உறுபொருள், நறுமலர் எழுதரு நாற் றம் போல், பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் ' என்று விளக்குகின்ருர். -

கஷ்டம் என்னும் வடசொல் இக்காலத்தில் மக்கள்பேச்சு வழக்கில் பெரிதும் பயிலுகின்றது. தமிழிலக்கியச் செய் யுள் நெறியில் இதனே முதற்கண் எடுத்தாண்டவர் திரு காவுக்கரசர் : கருமையிட்டாய வூனேக் கட்டமே கழிக்கின் றேன். நான் ' என்பது திருநாவுக்கரசர் கூறுவது. பின் னர் இதனே நம் வாதவூரடிகள் மேற்கொண்டு, "கல்வகை மனத்தேன் பட்ட கட்டமே' என்று இசைக்கின்ருர். சமண் சமய நூல்களிலும் பிறவற்றிலும் ஞான நிலையை யுணர்த்துதற்குக் கேவலம் என்ருெரு சொல்லேவழங்கியது தமிழறிஞர் நன்கறிந்தது. இச் சொல், கேவலம் நாய், கேவலம் துரும்பு என இழிவுச் சிறப்புணர்த்தும் முறை பழங் தமிழ் நூல்களுட் காணப்படாததொன்று; இம்முறை .யில் இச்சொல்லேத் திருவாதவூரடிகள், "எங்தை பெருங் துறை ஆதியன்று, கேவலம் கேழலாய்ப் பால் கொடுத்த கிடப்பறிவார் எம்பிரானவரே " என்று வழங்குகின்ருர். தோன்றி மறைவதொன்றை மாயம் என்பது " மாயப் பொய்ம்மொழி ' என அகநானூறு முதலிய சங்கத்

1. பழமொழி. .62. ' 2. திருஞான. 7:4. 3. அதிசயப். 9. 4. திருநா. 57:4. 5. திருச்சதக. 48. 6. திருவார்த்தை. 6.

7. அகம். 6.