பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

சைவ இலக்கிய வரலாறு

“திருச்செங்காட்டங்குடி வந்து சிறிது காலத்தில் அவர் சீராளர் என்னும் மகவைப்பெற்றார். கி. பி. 642-லோ 643-ன் துவக்கத்திலோ அவர் திருச்செங்காட்டங்குடிக்கு வந்திருத்தல் வேண்டும். வந்து எவ்வளவு காலத்துக்குப் பின்னர் சீராளர் பிறந்தார் என்பது தெரியவில்லை. இரண்டொரு ஆண்டுகள் இருக்கலாம். சம்பந்தமூர்த்திகள் வந்த காலத்துச் சீராளருக்கு நிறைந்த வயது மூன்றென்பது பின்கண்டவற்றால் விளங்கும்.” அவை,

வந்து வளர் மூவாண்டின் மயிர்வினை மங்கலஞ்செய்து
தந்தையாரும் பயந்த தாயாருங் தனிச்சிறுவர்
சிந்தை மலர் சொற்றெளிவின் செழுங்கலைகள் பயிலத்தம்
பந்தமற வந்தவரைப் பள்ளியினி லிருத்தினார்”


அந்நாளிற் சண்பைநக ராண்டகையா ரெழுந்தருள
முன்னாக வெதிர்கொண்டு கொடுபுகுந்து முந்நூல்சேர்
பொன்மார்பிற் சிறுத்தொண்டர் புகலிகாவலனார்தம் நன்மைச்
சேவடிகள் போற்றிசைத்து நலஞ்சிறந்தார்”


என்பன.

“பிள்ளையார் வந்தது கி. பி. 646-7-ஆம் ஆண்டிலோ அதற்கு இரண்டோராண்டு பின்னரோ இருத்தல் வேண்டும். ஏனென்றால் சீராளருக்கு நான்காம் வயது நடைபெற்ற காலம் அது. அவர் கர்ப்பத்தில் பத்து மாதம் இருந்திருப்பர். சிறுத்தொண்டர் தம்மூர் வந்த ஆண்டோடு இக்காலத்தைக் கூட்ட 646-7 ஆகும். அவர் ஊர் வந்த காலத்துக்கும் சீராளர் கர்ப்பத்தில் உற்பவித்ததற்கும் இடையில் இரண்டோராண்டு நிகழ்ந்ததென்றால் நான் மேற்சொல்லிய கணக்குச் சரியாய்விடும். கி. பி. 646-7-க்கும், 648-9-க்கும் இடையில் பிள்ளையார் திருச்செங்காட்டங்குடி வந்தனர் என்று வைத்துக்கொள்ளலாம். பிள்ளையார் பிறகு பல தலங்கள் சென்று திருப்புகலி வந்தனர். அங்கு, நாவுக்கரசர் வர, இருவரும் இன்னும் பல தொண்டர்களுடன் சில நாள் வசித்துத் திருநாவுக்கரசருடன் தலயாத்திரை செய்ய ஆரம்பித்தனர். பல தலங்களுக்குச் சென்று திருமறைக்காடு வந்தனர். அங்கு நின்று திரு-