பக்கம்:சைவ சமயம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 திருக்கோவில் வளர்ச்சி

ஒரே கோவிலில் பல மூர்த்தங்கள்

திருவாரூர்ப் பூங்கோவில் இடஅமைப்பில் மிகப் பெரியது. அதன் பெரிய திருச்சுற்றின் நான்கு பக்கங்களிலும் பல சிறு கோவில்கள் தனித்தனியே கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிறு கோவிலிலும் ஒரு லிங்கம் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறே பல பெரிய கோவில்களில் திருச்சுற்று மேடைமேல் பல சிவலிங்கங்கள் இருத்தலைக் காணலாம். இவை ஏன் ஒரே கோவிலில் பலவாக இருக்கின்றன ? சோழர் கால அரசாங்க அலுவலரும் பிறரும் தம் ஊரில் வழிபட்டு வந்த லிங்கத்தை நினைவிற்கொண்டு, தாம் புதிதாகப் பதவியேற்ற ஊர்க் கோவில்களிலும் அத்தகைய லிங்கங்களை அமைத்து வழிபடுதல் அக்கால மரபாக இருந்தது எள்பதைப் பல கல் வெட்டுக்கள் உணர்த்துகின்றன. எனவே, இவ் வுண்மையை உணர்ந்தவர் ஒரே கோவிலில் பல லிங்கங்களும், பல விநாயகர் உருவச் சிலைகளும் முருகன் உருவச் சிலைகளும் இருத்தலைக் கண்டு குழப்பமடையார் ; காலப்போக்கில் அவற்றுட் பல உருவச் சிலைகள் பூசையும் பொலிவும் இழந்து நிற்கும் பரிதாபக் காட்சியைக் காணும்போது, இவ் வரலாற்றை உணர்ந்தால் ஆறுதல் அடைவார். கல் தச்சருக்கு நன்றி

பல்லவர் காலத்தில் செங்கற்கோவில்களாகவும் சிறிய உருவினவாயும் இருந்த பல கோவில்கள் சோழர் காலத்தில் இங்ங்னம் கற்றளிகளாகவும் பெரிய உருவினவாகவும் மாறியதற்குச் சோழர் காலச் சைவசமய வளர்ச்சியே காரணமாகும். அவற்றைக் கற்றளிகளாக மாற்றிய கல் தச்சர் களின் ப்க்தியும் தொழில் திறமையும் பாராட்டத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/65&oldid=678207" இலிருந்து மீள்விக்கப்பட்டது