பக்கம்:சைவ சமயம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 67

தக்கன அல்லவா? சோழர் அத்தச்சர்களைப்பாராட் டினர்; நிலங்களை மானியமாக வழங்கினர். திருவா வடுதுறைக் கோவிலைக் கட்டிய கற்றளிப் பிச்சன் உருவம் அ க் கோ வி லி ல் இன்றும் இருக்கக் காணலாம். சூரியனுர் கோவில்

சிலப்பதிகார காலத்தில் காவிரிப்பூம்பட்டனத் திலிருந்த பல கோவில்களுள் உச்சிக்கிழான் கோட்டம்' (களுத்திரம் உரைத்த கதை) என்பது ஒன்று.

உச்சிக்கிழான் ' என்பது சூரியனுக்குப்பெயர். அவனுக்கொரு தனிக்கோவில் அப்பழங்காலத்தில் இருந்தது. ஆனல் சிலப்பதிகாரத்திற்குப் பின்னர் நாயன்மார் காலத்திலோ, கி. பி. 10-ஆம் நூற் ருண்டு வரையிலோ, தமிழகத்தில் சூரியனுக்குத் தனிக்கோவில் இருந்தமை தெரியவில்லை. முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் ஆடுதுறைக்குப் பக்கத்தில் சூரியனுர் கோவில் என்ற பெயரில் சூரியனுக்குத் தனிக்கோவில் கட்டப்பட்டது, என்று ஒரு கல் வெட்டுக் கூறுகின்றது. கருவறை மேற் குப்பக்கத்தை நோக்கியுள்ளது. கருவறையில் மூலக் கடவுள் சூரியனே. அதன் பக்கத்தில் காசி விசுவ நாதர், விசாலாட்சி உருவச் சிலைகள் உள்னள. சூரியனுக்கு எதிரில் கருவறைக்கு முன்பாகப் பிரஹஸ்பதி சிலை காணப்படுகிறது. கருவறையின் முக மண்டபம் மட்டும் கருங்கற்களால் கட்டப் பட்டுள்ளது. நவக்கிரங்களில் சூரியனும் பிர ஹஸ்பதியும் நீங்கலாகவுள்ள இராகு, சுக்கிரன், கேது, சந்திரன், அங்காரகன், புதன், சனி என்ற 5. A. R. E. 51 of D, 1908.

3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/66&oldid=678208" இலிருந்து மீள்விக்கப்பட்டது