பக்கம்:சைவ சமயம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - திருக்கோவில் வளர்ச்சி

எழுவர்க்கும் கருவறையைச் சுற்றிச் செங்கற்களா லான தனிக் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இக் கோவில் முழுவதும் குலோத்துங்க சோழ மார்த் தாண்ட ஆலயம் எனப் பெயர்பெற்றது என்று கல்வெட்டுக் கூறுகின்றது. இச்சூரியனுர் கோவி லில் காசிவிசுவேசுவரர் சிலையும், விசாலாட்சி சிலை யும் இருத்தலை நோக்க, காசியிலிருந்து குதோத் துங்கன் காலத்தில் சூரிய வணக்கம் தமிழகத்தில் நுழைக்கப்பட்டதாக இருக்கலாம் என்று கருதுதல் பொருந்தும். சோழர் காலத்தில் கன்னேசி நாட்டை ஆண்ட காஹடவால அரசர்கள் சூரிய் வனக் த்தைச் சிறப்பாகக் கொண்டவர்கள். குலோத்துங் கன் ஆட்சியில் சூரியனுக்கு என்று ஒரு தனிக் கோவில் கட்டப்பட்டதை நோக்க, குலோத்துங்க சோழனுக்கும், காஹடவால அரசருக்கும் அரசி யல் தொடர்பு இருந்திருத்தல் வேண்டும்,” என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.8

தனித்தனியே இருந்த விநாயகர், முருகன், அம்மன் இவர்கள் காலப் போக்கில் சிவன் கோவி லுக்குள் இடம் பெற்ருற்போலவே, (சூரியனுக்கும் பிற கிரகங்களுக்கும் மேற்குறிப்பிட்டவாறு தனிக் கோவில் ஏற்பட்ட பிறகு) சூரியன் உள்ளிட்ட நவக்கிரகங்கள் சிவன் கோவிலில் நாளடைவில் இடம் பெற்றிருத்தல் வேண்டும் என்று கருதுதல் பொருந்தும். கோவிலுக்காக உயிர் துறத்தல்

(1) கோவில் வளர்ச்சியில் தமிழ் மக்கள் தம் செல்வத்தைச் செலவிட்டாற் போலவே தம்முயிரை யும் தியாகம் செய்துள்ளனர் என்பதைப் பல கல்

6. A. R. E. 1908, p. 66.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/67&oldid=678209" இலிருந்து மீள்விக்கப்பட்டது