பக்கம்:சைவ சமயம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 69

வெட்டுக்கள் உணர்த்துகின்றன. திருவக்கரை சிவன்கோவிலில் சோழர் காலத்தில் ஆயிரக்கால் மண்டபம் ஒன்று கட்டப்பட்டது. அது கட்டி முடி வதற்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. அவற் றைக் கண்டு பொருத சைவ நன்மகன் ஒருவன் அவ்விடையூறுகளுக்குப் பலியாகவும் மண்டபம் கட்டி முடிக்கப்படவும் தன் உயிரைத் தியாகம் செய்தான் என்று திருவக்கரைக் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது.1

(2) மதுரையை அடுத்துள்ள திருப்பரங்குன் றம் இலக்கியப் பழமை வாய்ந்தது. அங்குள்ள முருகப்பெருமான் பத்துப்பாட்டு, பரிபபாடல் என் னும் சங்கநூல்களில் பாரட்டப்பட்ட தெய்வம். பிற்காலத்தில் திருப்பரங்குன்றம் மலையில் குடை வரைக்கோவில் ஏற்பட்டது. அதற்குப் பின்பு குடைவரைக் கோவிலே அடுத்து மண்டபங்களும் பிறவும் கட்டப்பட்டன. சோழரும் பாண்டியரும் பின் வந்த நாயக்க மன்னரும் அக்கோவிலில் பல திருப்பணிகள் செய்தனர். எனவே, அங்குப் பல கல்வெட்டுக்கள் இடம் பெற்றுள்ளன.

கி. பி. 1792-ஆம் ஆண்டு ஆங்கிலப் படை வீரர் திருப்பரங்குன்றத்தைக் கைப்பற்றிக் கோவிலை நோக்கி விரைந்தனர். அவர்கள் வருவதைக் கண்ட அரச்சகர், அவர்கள் நுழைவால் கோயிலின் தூய்மை கெடுமென்று அஞ்சினர் ; குட்டி என்ற ஒரு தமிழன, அப்படை வீரரைத் தடுக்க உயிர்த் தியாகம் செய்யும்படி வேண்டினர். உடனே அத் தமிழன் கோவில் கோபுரத்தின்மேல் ஏறிஞன் ;

7. 119 of 1906, 190 of 1904.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/68&oldid=678210" இலிருந்து மீள்விக்கப்பட்டது