பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ச. சோழர்காலச் சைவ சமயம்

வந்தது என்பதைக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. சமய வளர்ச்சிக்குத் தாயகம் கோயில்கள். அவை என்றும் அழியாமல் இருந்தாற்றான் சமயம் வளர முடியும். ஆதலாற்றான் ஆதித்தன் கோயில்களைக் கற்றளிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டான்; கோயில் கருவறையும் விமானமும் கற்றளியாக மாற்றப்பட்டன. இங்ங்ணம் ஆதித்தன் கற்றளியாக்கியதே திருப்புறம்பயத்தில் உள்ள சாட்சிநாதர் கோயில். அஃது அவன் பெருவெற்றிக்குக் காரணமான போர் நடந்த இடத்தில் இருத்தலின், அதைத் தன் காலத்திலேயே கற்றளியாக மாற்றித்தன் பெயர் இட்டான்போலும் அஃது அவன்கால முதல் ஆதித்தேச்சுரம் எனக் குறிக்கப்பட்டது." -

ஆதித்தன் மகனான முதற்பராந்தகன் சிறந்த சிவபக்தன்; பண்டித வத்ஸலன். இவன் செய்த திருப்பணிகளில் மிக்க சிறப்புடையதுதில்லைச்சிற்றம்பலத்தைப்பொன்வேய்ந்தது ஆகும்.' பராந்தகன் மூத்தமகனான இராஜாதித்தனால் சுந்தரர் பிறந்த திருநாவலூர் சிறப்புற்றது. அவன் அவ்வூர்க் கோயிலில் ஒரு புதிய கோயிலைக் கட்டினான். அஃது இராசாதித்தேசுவரம் எனப்பட்டது. அதற்கு அவன் தாயாரும் அரசாங்க அலுவலரும் நிவந்தங்கள் விடுத்தனர். இராஜாதித்தன் தம்பியான கண்ட்ராதித்தர் மிகச் சிறந்த சிவனடியார். அவர் கவிபாடும் ஆற்றல் உடையவர். அவர் தில்லைப் பெருமான்மீது பத்துப்பாக்கள் பாடியுள்ளார்; அவை 9-ஆம் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளன. அவர் திருப்பழனத்திற்குப் பக்கத்தில் கண்டராதித்த சதுர்வேதி மங்கலம் என்ற ஊரை உண்டாக்கினார். அங்குள்ள சிவன் கோயில் அவர் காலத்ததாகும்.

செம்பியன் மாதேவியார்: கண்டராதித்தர் மனைவியார் செம்பியன் மாதேவியார். இவர் இராசராசன் காலம் வரை வாழ்ந்தவராதலால் பல்லாண்டுகள் இருந்தவர் என்பது தெரிகிறது. இவர் செய்துள்ள வியத்தகு திருப்பணிகள் இந்திய வரலாற்றில் வேறு' எந்த அரசியும் செய்யாத அளவினவாகும். இவர் ஆதித்தன் மேற்கொண்ட முறையைப் பின்பற்றி, பாடல் பெற்ற கோயில்கள் சிலவற்றைக் கற்றளிகளாக மாற்றினார். அவை திருத்துருத்தி, திருக்கோடிகா, ஆரூர் அரநெறி, திருவக்கரை, திருமுதுகுன்றம், தென்குரங்காடுதுறை, நல்லம், நாங்கூர் என்பன. இவரால் நிலதானமும், பொன் வெள்ளிப் பாத்திரங்களும் நகைகளும் விள்க்குத்தானமும்பெற்றகோயில்கள் பல.அவற்றுள்திருமணஞ்சேரி, ஐயாறு,திருச்சேயலூர்,முதுகுன்றம், ஒத்தூர்,தலைச்சங்காடு,நறையூர்,