பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ச கோயில்கள் மடங்கள்- சமய நிகழ்ச்சிகள்

காண்கின்றன. (2) ஒருமண்டபத்திற் பலர் இருக்கின்றனர்.அவர்கட்கு நடுவில் ஒரு கிழவரும் இளைஞரும் நிற்கின்றனர். கிழவர் முதுகு வளைந்தவர். அவரது ஒரு கையில் தாளங்குடையும் மற்றொருகையில் ஒலையும் வைத்திருக்கிறார். இளைஞர் அடக்கத்துடன் நிற்கிறார். கூட்டத்தார் முகங்களில் வியப்பும் திகைப்பும் மாறிமாறித் தோன்றுகின்றன. கூட்டத்தினர்க்குவலப்பக்கம் ஒருகோவில் விமானம் தெரிகிறது. மண்டபத்தில் கூடியிருந்தவர் அவசரமாக அக்கோவிலுள் நுழைகின்றனர்.இந்த இரண்டாம் ஓவியம் சிவன் சுந்தரரைத் தடுத்தாட் கொண்ட வரலாற்றை விளக்குவது. (3) அடுத்த ஓவியத்தில் வெள்ளானைபூணிட்டநான்கு கொம்புகளுடன் காண்கிறது. அதன்மீது தாடியுடைய இளைஞர் இவர்ந்து செல்லுகிறார். அவர் கைகளில் தாளம் இருக்கிறது. அவருக்கு வலப்பக்கம் விரைந்து செல்லும் குதிரை ஒன்று தெரிகிறது.அதன்மீது ஒருவர்காண்கிறார். முன்னவர் சுந்தரர்; பின்னவர் சேரமான் பெருமாள். இருவரும் கயிலை செல்லும் காட்சி இது. (4) இவ்விருவர் ஓவியங்கட்கும் மேல்புற மூலைகள் இரண்டில் கந்தர்வர் பலர் காண்கின்றனர். அவருள் சிலர் சுந்தரர் மீதும் சேரமான் மீதும் மலர்களைப் பொழிகின்றனர்; பலர் வாத்தியங்களை ஒலிக்கின்றனர். இவ்வோவியங்கள் சோழர்கால மக்கட்குச் சுந்தரர் வரலாற்றின் முக்கியமான இருபகுதிகளை விளக்கியவையாகும். (5) முதற் பராந்தகன் காலத்தில், திரிபுரசம்ஹாரத்தைத் திருப்பூந்துருத்திச் சிற்பம் ஒன்று அழகுறக் காட்டுகிறது. அதற்கும் தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ளதிரிபுரசம்ஹார ஓவியத்திற்கும் வேறுபாடில்லை.

சமயத் தொடர்பான இந்த ஒவியங்கள் அக் கால ஓவியம் வல்லாரது சமய அறிவையும் நுண்கலுைத் திறனையும் நன்கு உணர்த்துவன.உள்ளத்தில்அழுந்திய சமய உணர்ச்சி இல்லையாயின், ஓவியர்.இவ்வழகிய ஓவியங்களைத்தீட்டியிருத்தல் இயலாது; சிற்பிகள் மேற்சொன்ன சண்டிசஅநுக்கிரக மூர்த்தியின் சிற்பத்தைக் கண்கவர் நிலையில் அமைத்திருக்க முடியாது. இன்றைக்கு ஏறத்தாழ 900 ஆண்டுகட்கு முற்பட்டவையான இவை இன்றும் உயிரோவியங் களாகக் காட்சி தருவதற்குக் காரணம், அக் கலைஞரிடம் காணப்பட்ட கலையுணர்வுடன் கூடிய சமயப் பற்றேயாகும். -

கடவுளர்திருமேனிகள்

பிட்சாடனர், கங்காதரர், கல்யாணசுந்தரர், கிராதார்ச்சுனியா, பஞ்சதேவர், லிங்கபுராண தேவர், உமாசகிதர், நடராசர், தட்சிணாமூர்த்தி, ரீ கண்டர், ரிஷபவாகனதேவர், பைரவர் என்ற