பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 கோயில்கள் மடங்கள்-சமய நிகழ்ச்சிகள்

கோயிலில் திருப்பதிகம் ஓத 48 பேர் பல கோயில்களிலிருந்தும் வர வழைக்கப்பட்டனர் என்பதால், அவரவர் வந்த கோயிலிலும் முன்னரே திருப்பதிகம் ஒதப்பட்டு வந்ததென்பது புலனாகும். அவை திருவிடைமருதூர், ஆனைக்கா, வெண்காடு, தில்லை முதலியன." பிற்பட்ட சோழர் காலத்தில் குஹூர், பிரம்மதேசம், முதுகுன்றம், விழிமிழலை, நல்லம், கடைமுடி, மாறன்பாடி, ஒற்றியூர், தென்னேரி, உடையலூர், துக்கச்சி, சோற்றுத்துறை, எல்வானாசூர், ஆமாத்தூர், தில்லையாடி, புறவார் பனங்காட்டுர், கழுமலம், இடைவாய், வழுவூர், புகலூர், எண்ணாயிரம், தில்லையாளி.நல்லூர் முதலிய ஊர்க் கோயில்களில் திருப்பதியம், திருச்சாழல் முதலியன ஒதப்பட்டன."

திருப்பதிகங்களைப் பிரீமண்ர்,' தேவரடியார்,' பிடாரர் (ஓதுவார்)" ஒதினர், உடுக்கை, மத்தளம், தாளம் இவற்றுடன் ஒதினர் சில கோயில்களில் காலையிலும், சிலவற்றில் காலை மாலைகளிலும், வேறு சிலவற்றில் மூன்று வேளையும், விழா நாட்களிலும் ஓதினர். மார்கழி மாதத்தில் திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை என்பன கோயில்களில் பாடப்பட்டன. சுருங்கக்கூறின், நாயன்மார் பாடிய அருட்பாடல்கள் அவர்களுக்குப் பிற்பட்ட சோழர் காலத்தில் பெருஞ்சிறப்புற்றன. - இச்சிறப்புக்குக்காரணம் என்ன?

இராசராசன்நம்பியைக்கொண்டுதிருமுறிைஒளவகுத்தபிறகே நாட்டில் அவற்றின்செல்வாக்குமிகுதியாயிற்று.அவன்ோதான்கட்டிய கோயிலில் 48 ஓதுவார்களை நியமித்தான். பின்னர்ப் பல கோயில்களிலும் திருப்பதிகங்கள் ஓதுவார் நியமனம் பெற்றனர். அவர்கள் பெற்ற காணி திருப்பதியக்காணி எனப்பட்டது." முதலாம் இராசேந்திரன் காலத்தில் தேவார ஒதுவார்க்குத்தலைவனாகவோ, அவர்களை மேற்பார்க்கவோ தேவார நாய்கம் என்று ஒர் அதிகாரி இருந்தான்."அதே அரசன் ஆட்சியில் தில்லையில் மாசித்திங்கள் விழாவில் திருத்தொண்டத்தொகை பாடப்பட்டது." முன் சொன்ன நரலோக வீரன் மூவர் திருமுறைகளையும் செப்பேடுகளில் எழுதிவைத்தான் சம்பந்தர் இவார ஒதத் தனிமண்டபம் கட்டுவித்தான். திருமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பெரிய புராணம் செய்யப்பட்ட பிறகு நாயன்மார் வரலாறுகள்நோட்டில் நன்கு பரவியதால், திருமுறைகளைப் போற்றுவார் தொகை மிகுதிப்பட்டது. நாயன்மார் சிற்பங்களும் சிலைகளும் கோயில்களில் இடம் பெற்றன; பெறவே, திருமுறைகள் பல கோயில்களிலும் படியெடுத்து வைக்கப்பட்டன:கோயிலில் பாதுகாப்பான இடங்களில் (குகைகளில்)