பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 ஏ- மடங்களும் குகைகளும்

தமிழ்ச்சைவ மடங்கள்

திருச்சத்திமுற்றத்து முதலியார் சந்தானம் : ஏறத்தாழக் கி.பி. 13-ஆம்நூற்றாண்டின் முதற்பகுதியில் சில புதிய மடங்கள்தோன்றின. அவற்றுள் தலைசிறந்தது திருச்சத்தி முற்றத்துத் திருஞானசம்பந்தன் திருமடம் என்பது. அம்மடம் எப்பொழுது உண்டாயிற்று என்பது தெரியவில்லை.அம்மடத்தைச்சேர்ந்த ஆண்டார்-பருதிப்பெருமாள் . என்பவர் சந்தானத்தில் வந்தவருள் ஒருவர் திருச்சத்திமுற்றத்து முதலியார்; அவரது சந்தானத்தைச் சேர்ந்த கிளைமடங்கள்ஆனைக்கா, உசாத்தானம், வீழி மிழலை, வலிவலம் என்னும் இடங்களில் தோன்றின. திருச்சத்தி முற்றத்து முதலியார் சந்தானத்தைச் சேர்ந்த நமசிவாய தேவருடைய சீடர்கள் திருவானைக்காவில் நாற்பத்தெண்ணாயிரவன் திருமடத்தில் இருந்தனர்." அம்முதலியார் சந்தானத்தைச் சேர்ந்த பரிபூரண சிவாசாரியார் என்பவர் உசாத்தானத்தில் இருந்த கூத்தாடு நாயனார் - மடத்துத் தலைவராக் இருந்தார்." தவப் பெருமாள் என்ற ஞான சிவாசாரியார் என்பவர் வீழிமிழலையில் அழகிய திருச்சிற்றம்பலமுடையார் - மடத்துக்கு நிலமளித்தார்." அதே சந்தானத்தைச் சேர்ந்த சோமநாததேவர் என்ற எதிரொப்பிலாதார் என்பவர் வலிவலத்தில் இருந்த தவப்பெருமாள் - திருமடத்தின் தலைவராக இருந்தார்." - மாளிகை மடத்து முதலியார் சந்தானம்:

திருவிடைமருதூரில் மாளிகைமடம் என்று ஒன்று இருந்தது. அஃது எப்பொழுது உண்டாயிற்று என்று கூறமுடியவில்லை. ஆனால் மூன்றாம் இராஜராஜன் காலத்தில் (கி.பி. 1240-இல்) அம்மாளிகை மடத்து முதலியார் சந்தானத்தைச் சேர்ந்த தத்தன் - உடையார் - ஈசான தேவர் என்பவர் நல்லூரில் இருந்தார். அவருடைய மாணவி அவர்க்கு ஒருமடத்தையும், நிலங்களையும் அளித்தார்."

பெரும்பற்றப்புலியூர் நம்பிகி.பி.13-ஆம் நூற்றாண்டினர் என்று கொள்ளலாம்." அவர் தில்லையில் இருந்த மாளிகை மடத்துத் தலைவரான வெண்காடார்க்கு மாணவரானவிநாயகன் என்பவர் தமக்கு ஞானாசிரியர் என்று கூறுகிறார்." இதனால் நம்பியின் காலத்தில் தில்லையில் மாளிகைமடம் ஒன்று இருந்தது என்பது தெரிகிறது. இம்மாளிகை மடத்துத் தலைவர் ஒருவர் பிற்கால நூல்களாகிய வேதாரணியப் புராணப் பாயிரத்திலும், திருக்கானப்போர்ப்புராணம் பாயிரத்திலும் துதிக்கப் பெற்றுள்ளனர்." இத்துதிகளால், மாளிகை மடத்து ஆசாரியர்கள் சைவ ஞான நூல்களில் வல்லவர்கள் என்பதும், அவர்களிடம் நம்பி போன்றார் பலர் படித்துப் பெரும் புலமையும் ஞானமும் பெற்றனர் என்பதும்தெளிவாகின்றன. .