பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ఫె 173

செண்பைக்குடி முதலியார் சந்தானம் : திருவானைக்காவில் மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் (கி.பி. 1250) ஆண்டார் - எம்பிரானார் - திருமடம் என ஒன்று இருந்தது. அது செண்பைக்குடி முதலியார்சந்தானத்தைச்சேர்ந்தது."திருச்சத்திமுற்றத்து-முதலியார் சந்தானத்தைச் சேர்ந்த கிளைமடம் திருவானைக்காவில் இருந்தது போல, செண்பைக்குடி முதலியார் சந்தானமடம் ஒன்றும் திருவானைக்காவில் இருந்ததெனத் தெரிதலால், அதன் தலைமை மடம் செண்பக் குடியில் இருந்ததென்பது போதரும். .

திருவாரூர் - ஆசார மழகியான் - திருமடம் : மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி. 1236) காலத்தில் திருவாரூரில் ஆசார மழகியான் - திருமடம் என்று ஒன்று இருந்தது. அதன் கிளை பாண்டி நாட்டுத் திருப்புத்தூரில் திருஞான சம்பந்தன் - திருமடம் என்ற

பெயருடன் இருந்தது. அதன் தலைவர் ரீ கண்ட சிவன் என்பவர்.

இவையும் முதலியார் மடங்களேயாகும்." மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் கோவந்தபுத்தூரில் திருத்தொண்டத்தொகையான்' திருமடம் இருந்தது. அதன் கிளை தில்லையில் இருந்தது." பாண்டி நாட்டுத் திருப்புத்தூரில் சுமார் கி.பி. 1280-இல் இதேபெயர் கொண்ட மடம் ஒன்று இருந்தது."

மருதப் பெருமாள் சந்தானம்: ஆண்டார்-மருதப் பெருமாள்சந்தானத்தைச் சேர்ந்த நமசிவாய தேவர் என்பவர் ஏறத்தாழத்கி.பி. 1230-இல் செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டன் திருமடி தைக் கட்டினார். அதற்கு நிலம் தானம் செய்யப்பட்டது." இச்சந்தானத் திற்குத் தலைமை மடம் எது என்பது விளங்கவில்லை.

இலக்கியத்தில் மடங்கள்

இதுகாறும் கல்வெட்டுக்களிற் குறிக்கப்பெற்ற மடங்களைப் பற்றிக் கூறப்பெற்றது. இனிச் சைவ சித்தாந்த நூல்கள் கூறும் மடங்களைப் பற்றிக் காண்போம். திருவண்ணாமலைக் கல்வெட்டிற் குறிக்கப்பட்டுள்ள திருவெண்ணெய் நல்லூர் - மெய்கண்டதேவனே சிவஞானபோதம் செய்த மெய்கண்ட தேவராகலாம்; அவர் கி.பி. 1232-இல் வாழ்ந்தவர் என்று ஆராய்ச்சி அறிஞரான Rகோபிநாதராவ் கூறியுள்ளார்.' மெய்கண்டதேவரது சிவஞானபோதத்திற்கு முன்னரே திருவியலூர் உய்யவந்த" தேவ நாயனார் என்பவர் திருவுந்தியார் என்னும் சைவ சித்தாந்த நூலைச்செய்தார். அவருடைய மாணவர்க்கு மாணவரான திருக்கடவூர் - உய்ய வந்த தேவ நாயனார் என்பவர் திருக்களிற்றுப் படியார் என்னும் மற்றொரு சைவசித்தாந்த நூலைச் செய்தனர். மெய்கண்டாரது தந்தையார்க்குச் சைவ ஆசாரியராக