பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 சோழர்காலச் சைவ இலக்கியம்

தத்துவத்திற்கு அப்பாலுள்ள இறைவனை யோக முடிவில் கேட்கும் சிலம்பொலிவழியே சென்று அடைய முயல வேண்டும்.' நான் பிரமம்' என்பது மயக்க உணர்ச்சியேயாகும்.” உயிரினிடம் சிவவடிவமாகிய ஞானத்தைக் கண்டு வணங்கிச் சிவபெருமானுக்கு அன்பு நீரால் திரு மஞ்சனம்.ஆட்டி தன்னை, அவனுக்கு வாடாத ஒரு மலராகச் சாத்தி வழிபடின், பிறவி ஒழியும்." அறிவு நெறியும், அன்பு நெறியும், பிறப்பை அறுக்க வல்லவை' -

இறைவனை அணைந் தோர்.இலக்கணம்

இறைவனை அணைந்தவரே அடியார் ஆவர். ஆலமரத்தைத்

தன்னகத்த்ே அடக்கிய வித்து போலத் திருவருளைத் தன்னகத்தே அடக்கியவர் அடியார்.” இறைவன் பெருமையை அடியார் அறிவார்;

அடியார்பெருமையை இறைவன் அறிவான்.இதற்குக் கண்ணப்பரும் காளத்தியப்பருமே சான்றாவர். இறைவன் பக்திவலையிற் படுபவன் என்பது சேந்தனார் அமுது படைத்த வரலாற்றிலிருந்து தெளியலாம்." ஞானநெறி நின்றவர்க்குக் காலம், இடம், திசை இருக்கை என்பன இல்லை. சிவஞானமும் சிவயோகமும் வித்தும் முளையும் போல்வன." - 3. சிவஞானபோதம்

இது மேற்சொன்ன 14 சாத்திரங்களில் தலைசிறந்தது; சித்தாந்த உண்மைகள் கோவைபட்ச் செய்யப்பட்ட செந்தமிழ் நூல். திருவெண்ணெய்நல்லூர் - மெய்கண்ட தேவர் என்னும் வேளாள அறிஞர் செய்தது; உரைநடைப் பகுதியும்செய்யுட்பகுதியும் உடையது. உரைநடைப் பகுதி மேற்கோள்களையும் ஏதுக்களையும் உடையது; 'செய்யுட் பகுதி 12 சூத்திரங்களாகவும் 81 வெண்பாக்களாகவும் உள்ளது. இப்பன்னிரண்டு சூத்திரங்களும் ரெளரவ ஆகமத்தில் உள்ள 12வடமொழிச்சூத்திரங்களின்மொழிபெயர்ப்பு என்பது டாக்டர்ரமண சாஸ்திரி போன்ற ஒரு சார் அறிஞர் கருத்து." சுவாமி வேதாசலம், கா. சுப்பிரமணிய பிள்ளை போன்ற அறிஞர்கள் அது முதல் நூலே என்று கருதுகின்றனர்." தென்னிந்திய சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் தலைவராகவுள்ள ம. பாலசுப்பிரமணிய முதலியார், (பி.ஏ.,பி.எல்.), சிவஞான போதம் மொழி பெயர்ப்பன்று என்பதற்கு 120 காரணங்கள் காட்டி 1949இல் சிறுநூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்."

மெய்கண்டார் கி.பி. 1 3ஆம் நூற்றாண்டின் முன்பகுதியில் வாழ்ந்தவர் என்பது சென்ற பகுதியிற் கூறப்பட்டது. இவர் பரஞ்சோதி