பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 - சைவரது சமுதாய வாழ்க்கை

3. சைவர்கள் பொதுக்கல்வியும் சமயக்கல்வியும் மருத்துவம் வான நூற்கலை முதலிய பல்கலைக் கல்வியும் கற்றிருந்தனர் என்பது சேக்கிழார் பெரியபுராணங்கொண்டு நன்கறியலாம். அந்நூலில் சேக்கிழார் தாம் பல்கலைப் புலவர் என்பதை நன்கு நிலைநாட்டியுள்ளார். எனவே, பண்டைத் தமிழ்க் கல்வி முறையில். பொதுக் கல்வி, சமயக்கல்வி, பல்கலைக்கல்வி என முத்திறக் கல்வி இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. அத்துடன் தொழிற்கல்வியும் இருந்தது. புரவித்தொழில், யானைத் தொழில், தேர்த்தொழில், வில், வாள் முதலிய படைக்கலத் தொழில்கள் இருந்தன." இத் தொழில்களில் அக் காலத்திற் சைவர்கள் நன்கு பயின்றிருந்தனர் என்பது இயற்பகையார், ஏனாதிநாதர், கோட்புலியார் முதலியோர் வரலாறுகளிலிருந்து அறியலாம். சத்தியார் கத்தி அவைத்திருந்ததும், எறிபத்தர் கோடரி வைத்திருந்ததும் அக் காலத்து அடியார்கள் ஆயுதப் பயிற்சியில் வல்லவர்கள் என்பதை வலியுறுத்துகின்றன.

4. 'சிவன் கற்றார்கள் நாவினான் என்றும் 'கற்றிருந்த கலை ஞானம் ஆனாய்,நீயே" என்று சிவனையே கலை ஞானமென்றும் கூறலை நோக்க, அப்பர் காலத்தில் கல்வியைப் பற்றிச் சைவர் கொண்டிருந்த மனப்பான்மைநன்கு விளங்கலாம். அப்பரும் சுந்தரரும் சங்க நூற்களை நன்கு பயின்ற சைவர் என்பது தருமிக்குப் பொற்கிழியளித்தமை, பாரிபற்றிய குறிப்பு இவற்றிலிருந்து தெரிகிறது." சுந்தரர் காலத்தில் புலவர்கள் பலர் இருந்தனர் என்பதும், அவர்கள் நன்கு படித்தவர்கள் என்பதும் சுந்தரர் பாக்களிலிருந்து தெரிகின்றன. 'தண்தமிழ் நூற் புலவர்க்கோர் அம்மான்' என்று சுந்தரர் கூறலிலிருந்து அக் காலப் புலவர் பலர் சைவரென்பது பெறப்படும். கல்வி உயிர்க்கு இனியது என்பதும், அதனினும் இனியவன் சிவன் என்பதும் சுந்தரர் கருத்து.' -

5. திருமூலர்காலமுதல்உமாபதிசிவம் காலம்வரைதிருமந்திரம் முதலிய சித்தாந்த நூல்கள் சைவர்களால் நன்கு படிக்கப்பட்டு வந்தன என்பது சென்ற பகுதியில் நன்கு விளக்கப்பட்டது அன்றோ? அருணந்தி சிவாசாரியாரை மெய்கண்டாருடைய தந்தையார் சமயகுருவாகக் கொண்டிருந்தமையும், மாளிகை மடத்து ஆசாரியரிடம் ஒருவர் உபதேசம் பெற்றமையும் பொதுமக்கள் சமயக் கல்வியில் காட்டிய ஆர்வத்திற்கேற்ற சான்றுகளாகும்."

பெண்கள் கல்வி: சைவப் பெண்களும் சைவ ஆண்களைப் போலவே கல்வி கற்றிருந்தனர் என்பதற்குக் காரைக் காலம்மையாரே