பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 ச சைவரது சமுதாய வாழ்க்கை

பெருமாள் கயிலாயத்திற்குக் குதிரை மீது புறப்பட்டபோதும்." ஐந்தெழுத்தோதினர். அடியார் காலையில் துயில் நீத்தெழும்போதும் ஐந்தெழுத்தோதி எழுதல் மரபு. ஐந்தெழுத்து - சிவமந்திரம் என்று சேக்கிழார் கூறுகிறார்." - .

புறச்சமய வெறுப்பு: பல்லவர் காலத்தில் சைவமும் வைணவமும் சமனபெளத்தங்களுடன் போராடி, அவற்றின் செல்வாக்கை ஒழித்தன. அதனால் பிற்காலச் சோழர் காலத்தில் சைவமும் வைணவமுமே தமிழகத்தில செல்வாக்குற்றன. எனினும், சோழமன்னர் அனைவரும் சிறந்த சிவனடியார்கள் ஆதலின், சைவமே நாட்டில் தனியாட்சி புரிந்ததென்னல் தவறாகாது. சோழ அரசருள் ஒருவன் அதிராசேந்திரன், அல்லது வீரராசேந்திரன் ஆவன். இவருள் ஒருவன் காலத்திற்றான் இராமாநுசர் சோழ நாட்டை விட்டு ஹொய்சள நாட்டிற்குஓடும் துர்ப்பாக்கியநிலைமை உண்டானது."மற்றொருவன் சேக்கிழார் காலத்தவனான இரண்டாம் குலோத்துங்கன். இவன் தில்லைக் கோவிந்தராசரைப் பெயர்த்து அப்புறப்படுத்திவிட்டான்.' இரண்டாம் இராசராசன் 14-ஆம் ஆட்சியாண்டில், 'நமது கோயிலைக் கண்காணிக்கும் மாகேசுவரர்கள் சிவநெறிக்குமாறாக வைணவருடன் தாராளமாகப் பழகுவது கூடாது; இறைவனுக்கு உரிய செங்கழுநீர் மலர்களை அவர்கள் விற்கவும், அணியவும் கூடாது.” என்று திருக்கடவூர்ப்பேரவையினர் தீர்மானித்தனர்.” -

திருத்தான்தோன்றி மாடம் உடையார் கோயில் குளத்து நீரை, அவ்வூரைச் சேர்ந்த பெருமாள் கோயில் சிலையை நீராட்ட எடுத்துச் செல்வது வழக்கம். பிறகு சிவன் கோவில் அதிகாரிகள் அவ்வாறு நீர் எடுத்துச் செல்வதைத் தடுத்துவிட்டனர். ஆதலால் அவ்வூர் அவையினர் பெருமாளை நீராட்டக்காவிரியாற்றுநீரைப் பயன்படுத்தத் துணிந்தனர். நீரைக் கொண்டுவர ஒரு புதிய பாதையை அமைக்க வரியிலியாக நிலதானம் செய்தனர். முன்னவை இரண்டும் சோழமன்னர் வைணவத்தின்மீது கொண்ட வெறுப்பையும், பின்னவை இரண்டும் சிவன் கோயில் ஆட்சியாளர் வைணவத்தின்மீது கொண்டிருந்த வெறுப்பையும் நன்கு காட்டவல்லவை. எனினும், இவை தவிரப் பொதுவாகச் சைவ மக்கள் பிற சமயங்களை, தம் சமயப்பற்றின் காரணமாக, வெறுத்தார்கள் என்று கூறுதல் இயலாது.

கோயில் தொண்டுகள்: கோயில்கள் ஆகம முறைப்படி கட்டப்பட்டவை அடியார்கட்குத் திருக்கோயில் வழிபாடு இன்றியமையாதது. அங்குத் தொண்டு புரிதலும் அவர்கள் இயல்பாக மேற்கொள்ளும் பணியாகும். கோயிலைப் பெருக்குதல் (திரு