பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ༤དོ་དྷུ་ཟླ་ 227

அலகிடல்),கோயிலைச்சாணமிட்டு மெழுகுதல் (திருமெழுக்கிடல்), இறைவன் பூசைக்குரிய மலர்களைப் பறித்தல், இண்டை, கண்ணி, தார் முதலிய பலவகை மாலைகளைத் தயாரித்தல், விளக்குகள் வைத்தல் முதலிய கோயிற் பணிகள் செய்வர். அப்பர் கோயில் தொண்டு செய்தவர் திலகவதியார் திருவலகு, திருமெழுக்கு, மாலைகட்டல் முதலிய பணிகள் செய்தவர் சங்கிலியார் இறைவனுக்குரிய மாலைகளைத் தொடுக்கும் பணியில் ஈடுபட்டவர்." அடியார் நந்தவனம் வைத்துப்பாதுகாத்தனர்.திருமுறை எழுதுதல், பாதுகாத்தல், பாடல் முதலியவையும் ஆண்டார் தொழில்கள் என்று சோழர் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. -

... கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயிலில் விளக்கெரித்தல், விழாக்கள் செய்தல் முதலிய திருப்பணிகள் புண்ணியம்தரும் சமயப்பணிகளாகக் கருதப் பட்டன. ஆதலின்சோழர் காலத்தில் கணக்கற்ற கோயில்கள் பலராலும் கட்டப்பட்டன; நந்தவனங்கள் அமைக்கப்பட்டன. கோயிலில் விளக்கெரிக்கப் பொது மக்கள் நிவந்தங்களை அளித்தனர்; காலா காலங்களில் விழாக்கள் செய்ய நிலம் முதலியன தானமாக அளிக்கப்பட்டன. அடியார்களைப் போற்றல் சைவசமயத்தில் சிறந்த பணியாகக் கருதப்பட்டதால், நாயன்மார்கட்குக் கோயில்களும் உருவச்சிலைகளும் பூசைகளும் விழாக்களும் ஏற்பட்டன, இத்தகைய திருப்பணிகளில் அரசர் முதல் துறவி ஈறாக இருந்த எல்லாச் சைவரும் மன மகிழ்ச்சியோடு ஈடுபட்டனர். சோழநாட்டை வென்ற ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் தான் வென்ற நாட்டிலுள்ள தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தான் எனின், அவனது தொண்டின் சிறப்பை என்னென்பது" விசயராசேந்திர சோழரின் அணுக்கியார் (பணிப்பெண்) பல்லவன்-பட்டாலி நங்கை என்பவள் திருவிழிமிழலைக் கோவிற். கூரைக்குப் பொன்னோடுகள் உதவினாள் எனின், அப்பணி மகளது பக்திக்கு எல்லை கூற முடியுமா?" சுருங்கக் கூறின், அக்கால மக்கள் தங்கள் உடல்-பொருள்-ஆவி என்னும் மூன்றையும் கோயில் தொண்டிலேயே வைத்திருந்தனர் என்பதைச் சோழர் காலத்தெழுந்த ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன என்று கூறுவதே பொருத்தமாகும்.

அடியார்க்குக் கோயில் எடுத்தல்: சிறந்த பக்திமான்களைப் புதைத்த அல்லது எரித்த இடத்தில் லிங்கத்தை எழுப்பிக் கோயில் கட்டல் நாட்பட்ட வழக்கம். பல்ல்வ கம்பவர்மன் காலத்தில்