பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - பல்லவர்க்கு முற்பட்ட சைவ சமயம்

நூல்களால் அறியலாம். புத்தர் கோயில் சேதியம்' எனப்பட்டது. காவிரிப்பூம்பட்டினத்தில் புத்தாலயத்தில் இந்திரனால் நிருமிக்கப்பட்ட ஏழு அரங்குகள் இருந்தன. அவை புத்த சங்கத்தார் இருக்க இடமாக இருந்தவை. சாரணர்கள் அவற்றில் இருந்து பெளத்த ஆகமங்களை உபதேசித்தனர்.* மணிமேகலையின் காலத்தில் காஞ்சியில் சோழப் பிரதிநிதியால் ஒரு சேதியம் கட்டப்பட்டது." பள்ளி என்பது புத்த முனிவர் உறைவிடம்."

பெளத்தர்க்கு, புத்தன், அவர் உபதேசித்த தருமம் அவர் ஏற்படுத்திய சங்கம் என்பன சிறந்தன. பெளத்த சங்கத்தார் துறவிகள். அவருள் ஆண் துறவிகள் 'பிக்ஷாக்கள் என்றும், பெண் துறவிகள் 'பிக்ஷ னிகள் என்றும் பெயர் பெற்றனர். மணிமேகலை காவியத்திற் கூறப்படும் அறவணவடிகள் பிக்ஷ மணிமேகலை பிக்ஷணிை.இருபால் துறவிகளும் தலையை மொட்டை அடித்துக் கொண்டனர்;" துவராடை உடுத்து வந்தனர்; தம்மை நாடிய இல்லறத்தார்க்கு அறவுரை உபதேசித்தனர்." அவ்வில்லறத்தார் உபாஸ்கர் எனப்பட்டனர். அவர்கள் துறவிகளுடைய பாதங்களைக் கழுவி வணங்கி வரவேற்று. உணவு படைத்தனர்." ஆசையை ஒழிப்பதும் எவ்வுயிரிடத்தும் அன்பாயிருப்பதுமே பெளத்தருடைய சிறந்த கொள்கைகள். பெளத்த தருமம் பற்றிய பல விவரங்கள் மணிமேகலையிற் கூறப்பட்டுள்ளன." பெளத்தமும் சமணமும் சாதிகளை ஒப்புக் கொள்ளாதவை; வேத வேள்விகளை ஒப்புக்கொள்ளாதவுை; ஒழுக்கமே உயர்வை அளிக்கும் என்ற கொள்கை உடையவை. -

இவை அன்றி ஆசீவகமதம் முதலியனவும் சிறிய அளவில் தமிழகத்தில் இருந்தன." -

அக்கால அந்தணர்நிலைமை

வேதங்களில் வல்ல பிராமணர்கள் பழந்தமிழ் நூல்களில் பல இடங்களில் குறிக்கப்பட்டனர்.அவர்கள் ஓதல்-ஒதுவித்தல்,வேட்டல் - வேட்பித்தல், ஈதல் - இரத்தல் என்னும் ஆறு தொழில்களைச்

செய்தனர். அவர்களது வடமொழிச் சொற்கள் தமிழில் வழங்கப்பட

வேண்டும் முறைபற்றியும் மேற்சொன்ன ஆறு வகைத் தொழில்கள் பற்றியும் தொல்காப்பியம் கூறுகிறது." வைதீகப் பிராமணர்களுள் முற்றும் துறந்த முனிவரும் இருந்தனர். மதுரையில் இருந்த அந்தணப் பள்ளி, மலைக்குகை போலக் கட்டப்பட்டிருந்தது. அங்கு இருந்த அந்தணத் துறவிகள், மக்கட்குச் சமயக் கருத்துக்களை வழங்கினர்." நான்மறை, ஆறங்கம் இவற்றில் வல்ல அந்தணர்தமிழரசரிடம் மதிப்புப் பெற்றனர். ஊர்களையும் நிலங்களையும் மானியமாகப் பெற்றனர்."