பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 = பல்லவர்க்கு முற்பட்ட சைவ சமயம்

முன்னவை இரண்டும் சிறந்த சமணத் துறவியாராகிய இளங்கோவடிகள் கூற்று. பின்னது பெளத்தராகிய சாத்தனார் கூற்று. புறச் சமயத்தாராகிய இவர்கள் இருவரும் இங்ங்ணம் சிவனுக்கு முதலிடம் தந்திருத்தலைக் காணச் சிலப்பதிகார மணிமேகலை காலத்தில் சைவசமயம்பெற்றிருந்த முதன்மை ஒருவாறு அறியப்படும். அத்துடன், அப்புறச் சமயிகளது மதவேறுபாடற்ற நல்லுள்ளமும் நன்கு விளங்கும். இப் புலவர்கள் கூற்றை, -

நீரும் நிலனும் தீயும் வளியு. மாக விசும்போடைந்துடன் இயற்றிய

மழுவாள் நெடியோன் தலைவனாக."

என வரும் மதுரைக் காஞ்சி அடிகளும் ஆதரிக்கின்றன.

சமய வெறுப்பு .

அக்காலத்தில் சைவம்,வைணவம், சமணம்,பெளத்தம்முதலிய சமயங்கள் அமைதியாக நாட்டில் வாழ்ந்தன; அமைதியாகப் பிரசாரம் செய்தன; வெளிப்படையாகப் பூசல் இன்றி வாழ்ந்தன. எனினும், வைதிகச் சமயிகட்குச் சம்னம், பெளத்தம் போன்ற புறச் சமயங்கள் வெறுப்பைத் தந்தன; வைதிகர் சிலர் புறச் சமயக் கொள்கைகளை மறுத்து வந்தனர் என்பது ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் பாடலால் தெரிகிறது: "வேதம் நான்கு பிரிவுகளையும் ஆறு அங்கங்களையும் உடையது. அது சிவபிரானுடைய நாவை விட்டு நீங்காதது. புத்தர் முதலிய புறச் சமயத்தார் வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைக் கண்டவர்கள். அவரது மிகுதியை (செல்வாக்கை)ச் சாய்க்கவேண்டி, அவருடைய மெய்போன்ற பொய்க் கொள்கைகளை அறிந்து, அப் பொய்யை மெய்யென்று கருதாமல், உண்மைப்பொருளை அவர்கட்கு ஏற்பச் சொல்லி, இருபத்தொரு வேள்விகளைக் குறைவின்றிச் செய்த அறிவுடையோர் மரபில் வந்தவன்ே!” என்று ஆவூர் மூலங்கிழாரால் பாராட்டப்பட்டவன் சோழ நாட்டுப் பூஞ்சாற்றுர்ப் பார்ப்பான் கெளனியன் விண்ணந்தாயன் என்பவன்." .

முடிவுரை . இதுகாறும் கண்ட விவரங்களிலிருந்து கீழ்வரும் உண்மைகள் புலன்ாகின்றன: - . -

1. பல்லவர்க்கு முற்பட்ட தமிழகத்தில் சைவம், வைணவம், பெளத்தம், சமணம் முதலிய மதங்கள் இருந்தன. அவற்றுள் சைவசமயம் முதலிடம் பெற்றிருந்தது. .