பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ச. முற்காலப்பல்லவர்காலத்தில் சைவ சமயம்

பரமபாகவதன் என்று பட்டயத்திற் கூறிக்கொள்கிறான். அவன் மகனான சிம்மவர்மன் 11வெளியிட்ட பிகிராப் பட்டயம் (Pikira grant) பகவத் (விஷ்ணு) தோத்திரத்துடன் தொடங்குகிறது.’ முதலாம் நந்திவர்மன் பட்டயம் அவனைப் பரமபாகவதன் என்று கூறுகிறது." இரண்டாம் நந்திவர்மன் காலத்து உதயேந்திரம் பட்டயங்கள் சிம்மவிஷ்ணுவைப் பக்தியாராதித விஷ்ணு சிம்ம விஷ்ணு என்று குறிக்கின்றன." -

வட இந்தியாவில் சுங்கவம்ச ஆட்சி ஏற்பட்ட பிறகு, வைதிகர் செல்வாக்குப் பெற்றனர்; இராமாயண் - பாரதங்கள் திருத்தி எழுதப்பட்டன; பிரமன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சமநிலையில் வைக்கப்பட்டனர். இராமனும் கிருஷ்ணனும் விஷ்ணுவின் அவதாரங்களாகக் கருதப்பட்டனர்; ஒருசாரார் சிவனை உயர்த்தினர்; மற்றொரு சாரார் விஷ்ணுவை உயர்த்தினர். கீதை முடிவான உருவெடுத்தது அக் காலத்திற்றான். கிருஷ்ணன் விஷ்ணுவின் முழு அவதாரம் என்று கருதப்பட்டான், பகவான் என்று அழைப்புண்டான். அவனுடைய கதைகள் பொது மக்ளிடம் பரவின. அவன் வழிபாடு பாகவதமதம் எனப்பட்டது. அம் மதத்தைப் பின்பற்றியவர் பாகவதர் எனப்பட்டனர். அவன் வரலாற்றைக் கூறும் நூல் பாகவதம் எனப்பட்டது. வட இந்தியாவில் பேரரசர்களாயிருந்த குப்தர்கள் (கி.பி. 300-600) தங்களைப் பரமபாகவதர்கள் என்று கூறிக் கொண்டனர். அவர்கள் காலத்தில் பாகவத சமயம் நாடெங்கும் பரவியது. இலக்குமியை நாராயணனுடன் இணைத்து வழிபடும் முறையும் ஏற்பட்டது. குப்தர்கள் காலத்தில் புராணங்கள் பல எழுதப்பட்டன. அரசராலும் பிறராலும் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும்பெரிய கோயில்கள் கட்டப்பட்டன; விழாக்கள் முதலியன நடைபெற்றன. இங்ங்னம் வடநாட்டிற் சிறப்பாகப் பரவிய பாகவத மதம், மஹாராஷ்டிரத்திலும் தெலுங்கு நாட்டிலும் பரவியது. சாளுக்கியர் ஆட்சித் தொடக்கமான கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் - மங்களேசன் ஆட்சியில் சிவ - விஷ்ணு கோயில்கள் பாறைகளிலும் குடையப்பட்டன. சாளுக்கியர்

விஷ்ணுவை வராக அவதாரத்தில் வணங்கினர் வராகக் கொடியைத்

தங்கள் கொடியாகக் கொண்டிருந்தனர்."

இவ்வாறு வடநாட்டில்தோன்றிப்பையப்பை யத் தென்னாட்டிற் பரவிய பாகவத சமயத்தையே மேற்சொன்ன பல்லவ அரசர்கள் பின்பற்றினர் என்பது அவர்கள் தங்களைப் பரம பாகவதர்கள் என்று கூறிக்கொண்டதிலிருந்து நன்கு அறியலாம்.