பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - முற்காலப் பல்லவர்காலத்தில் சைவ சமயம்

இருந்தது போலும் அஃதாவது, சிவனது மூத்த மகன்கணபதி என்பது பொருள். 'கணங்கட்குத் தலைவன் என்னும் பொருளில் கணபதி” என்னும் பெயரும், தொடங்கும் செயல்களை ஊறின்றி நிறைவேற்றும் தலைவன் என்னும் பொருளில் விக்கினேசுவரன் என்னும் பெயரும் மூத்த பிள்ளையாருக்கு உண்டு. இக் கடவுளையே முழுமுதற் கடவுளாகக் கொண்டசமயமே காணாபத்தியம் எனப்படும்.இக்கடவுள் வழிபாடு ஏறத்தாழக் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் உண்டானது என்னலாம்."

3. பரணதேவ நாயனார் : இவர் பாடியுள்ளது சிவபெருமான் திருவந்தாதி என்னும் ஒரே நூலாகும். இதன்கண் ஆளப்பட்டுள்ள பேச்சு:உளரேல், உன்பால், உன்னை நீர், ஆனால்' முதலிய சொற்கள் புறநானூறு போன்ற பழைய நூல்களில் காணப்பெறாதவை. இவையே இப்புலவர் பல்லவர்க்கு முற்பட்ட காலத்தவர் அல்லர் என்பதை வலியுறுத்தப்போதியவை. ஆயின், நூறு செய்யுட்களைப் பாடிய இவர், கபிலதேவரைப் போலவே, கண்ணப்பர் உள்ளிட்ட எந்த அடியாரையும் தம் பாக்களிற் குறியாமையின், கண்ணப்பர்க்கும் முற்பட்டவர் எனக் கொள்ளலாம்.

இவருடைய பாக்களிற் குறிக்கப்பட்டுள்ள சிவத்தலங்கள் இவையாகும்: (1) இடைமருது, (2) புகலூர், (3) ஒற்றியூர், (4) ஆருர், (5) பாசூர், (6) தில்லை, (7) ஆமாத்தூர், (3) ஏகம்பம், (9) ஆனைக்கா, (10) ஆலவாய், (11) கடல் நாகைக் காரோணம், (12) அண்ணாமலை, (13) ஆலந்துறை, (14) சோற்றுத்துறை, (15) வீரட்டம், (16) சிராமலை, (17) பூவணம், (18) புகலூர், (19) வெண்காடு, (20) சேதுக்கரை (இராமேசுவரம்), (21) கோளிலி, (22) ஆலங்காடு, (23) மறைக்காடு, (24) வலஞ்சுழி, (25) அம்பர் மாகாளம்,% (26) கழுமலம், (27) கழிப்பாலை, (28) செங்காட்டங்குடி, (29) மீச்சூர் (மீயச்சூர்), (30) கடவூர் (31) கானப்பேர், (32) காளத்தி, (33) மருகல், (34) சாய்க்காடு, (35) பைஞ்ஞ்லி, (36) வஞ்சி, (37) ஈங்கோய் மலை."

இவை தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற பதிகள், இவற்றைப் பரணர் கருத்துடன் குறித்திருத்தலால், இவர் இத் தலங்களைத் தரிசித்தவர் எனக் கோடலில் தவறில்லை.

கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரும் சம்பந்தரும் தமக்கு முன்பே நாட்டில் பல கோவில்களில் பண்ணிறைந்த பாக்கள் பாடப்பட்டு வந்தன என்று குறித்துள்ளதைக் காண,"மேற்சொன்ன நக்கீரதேவர், கபிலதேவர், பரணதேவர், காரைக்கால் அம்மையார்,