பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ༤པར་ཧཱ་༔ 7 1

அரசர் கடமை: திருமூலர் காலத்தில் கோயில்கள் மரம், செங்கல் இவற்றால் ஆனவை. கோயிலில் முத்துக்கள், விலையுயர்ந்த மணிகள், ஆகம நூல், அரிசி, அன்னம், மலர்கள், தயிர், பால், நெய் முதலியன இருந்தன." "கோவில் மதிலிலிருந்து ஒரு கல் எடுக்கப்படும் குற்றம், (அக் கோவிலைக் காக்கக் கடமைப்பட்டுள்ள) அரசனை வாளுக்கு இரையாக்கும். கோயிற் பூசைகள் செவ்வையாக நடைபெறவில்லை யாயின் மழை குன்றும் அரசனது போர்வலி குன்றும். ஆகமங்களை நன்கு அறியாது பெயரளவில் பிராமணனாயிருப்பவன் அர்ச்சகனாயிருப்பின், அரசனுக்கு நோயுண்டாகும்; நாட்டில் பஞ்சம் உண்டாகும்.’’ என்னும் திருமூலர் கூற்றுகள் அரசன் கோயில்களை நன்கு கவனிக்கக் கடமைப்பட்டவன் என்பதை வலியுறுத்துகின்றன. தத்தம் சமயநெறி நில்லாதவரைத் தண்டித்தலும் அரசன் கடமை என்பது திருமூலர் கருத்து."a

திருநீறு : திருநீற்றைப் பூசுபவரிடம் தீவினைகள் அண்டா : சிவகதி சாரும். திருநீறு பூசுவோர் இறைவன் திருவடிகளைச் சேர்வர் என்று திருமூலர் கூறுகிறார். தொண்டர்கள் திருநீறு அணிந் திருந்தனர்."

சிவன் அடியார்கள் : ஆகமவழி நின்ற சைவர்கள் திருமூலர் காலத்தில் மாஹேசுவரர் எனப் பெயர் பெற்றனர். அவர்கள் காபாலிகர், பாசுபதர், பைரவர், மாவிரதியர் முதலியோரின் வேறானவர். அவர்களை நிந்திப்பவர் தீய நரகில் வீழ்வர். மாஹேசுவரர் நீறு அணிபவர், அவர்களைச் சிவனாகக் கருதிப் பூசிப்பவர் நல்வினை எய்துவர். அவர்கட்குப் பகல் உணவு தருதல் ஆயிரம் கோயில்களைக் கட்டுவதைவிடச்சிறந்ததாகும்."சைவத்துறவிகள் சிறப்பும், அவர்கள் பிச்சை ஏற்று உண்ணும் முறையும், அவர் உடல்கள் அடக்கம் செய்யவேண்டும் முறையும் பிறவும் 7-ஆந் தந்திரத்தில் கூறப்பட்டுள்ளன." தமிழகத்தில் அறிவு மிக்கவராய், நீரை வாயிலிருந்து கொட்டுவது போல மிக எளிதாகப் பாடல்களைப் பாடிக்கொண்டு நாடு சுற்றும் அறிஞர்களைத் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்."a இதனால் அவர் காலத்தில் சிவனடியார் சிலரேனும் பாக்களைப் பாடித் தல யாத்திரை செய்து வந்தனர் என்பது பெறப்படும்.

வைதிகர் நிலைமை : நான்கு வேதங்களிலும் ஆறு அங்கங்களிலும் வல்ல பிராமணர்கள் சங்க காலத்திலேயே நாட்டிற் குடியேறியிருந்தனர்; அரசர்களிடம் ஊர்களையும் நிலங்களையும் பெற்றனர் என்பது இரண்டாம் அதிகாரத்திற் கூறப்பட்டது; பின்பு