பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 కణా பிற்காலப் பல்லவர் காலத்தில் சைவ சமயம் -1

இவ்வாக்கியங்கள், முடிமீது லிங்கத்தைத் தரித்திருந்தான் என்றெண்ண இடந்தருகின்றன. ருத்திராக்ஷத்தாலான சிவலிங்கத்தை முடியாகத் தரித்திருந்தான் என்று அறிஞர் கருதுகின்றனர்." இதிலிருந்து இவனது பக்தியின் சிறப்பை நன்கறியலாம்.

இராசசிம்மன்: இவன் முதலாம் பரமேசுவரவர்மன் மகன். இவன் கற்களை அடுக்கிக் கற்கோயில் கட்டிப் புகழ்பெற்றவன். மாமல்லபுரம் கடற்கரையில் கூடித்திரிய சிம்ம பல்லவேசுவரம், இராசாசிம்ம பல்லவேசுவரம் என்ற இரண்டு சிறிய சிவன் கோயில்கள் இவனால் கட்டப்பட்டவை.' வராக மண்டபத்தின் மேலுள்ள ஒலக்கணேசுவரர் கோயிலும் இவனால் கட்டப்பட்டது." மாமல்ல புரத்தை அடுத்த சாளுவன் குப்பத்தில் உள்ள அதிரண சண்டேசுவரர் கோயிலும் இவன் கட்டியதே. பனமலைக் குகைக் கோயிலும் இவனால் குடையப்பட்டது." பன மலையில் உள்ள தலபுரீசுவரர் கோயிலிலும் வாயலூர்"a வியாக்ர புரீசுவரர் கோயிலிலும் இவன் கட்வெட்டுக்கள் காணப்படுதலால், அவை இவனால் கட்டப்பட்டவையாகலாம்; அல்லது ஆதரிக்கப்பட்டவையாகலாம்." திருப்போரூர்த் துண் கல்வெட்டு ஒன்றைக் காண, அங்கு இவன் காலத்துச் சிவன் கோயில் ஒன்று இருந்தது தெரிகிறது."

இவன் கட்டிய எல்லாக் கோயில்களிலும் உலகப் புகழ்பெற்றதும் சிற்ப வேலைப்பாடு அமைந்ததும் காஞ்சி கயிலாசநாதர் கோயிலேயாகும். அதன் பழைய பெயர் இராச சிம்ம பல்லவேசுவரம் என்பது. அஃது அமைப்பில் மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில்களை ஒத்தது. திருச்சுற்றுச் சுவரில் 58 சிறு கோயில்கள் உள்ளன. அவற்றில் அம்மையப்பர், பாற்கடல் கடைந்த வரலாறு, முப்புரம் எரித்த வரலாறு, மார்க்கண்டனுக்காக யமனை உதைத்த வரலாறு, சிவன் அர்ச்சுனன் போர், இராவணன் கயிலையைப் பெயர்க்கும் காட்சி, சிவன் நால்வர்க்கும் அறம் உரைத்தகாட்சி, திருமால் சிவனை வழிபட்டு ஆழி பெற்ற காட்சி, இராமன் வழிபட்ட ஆன்ம லிங்கத்தை அநுமான் கவர்ந்து செல்லல் முதலிய செய்திகளைக் குறிக்கும் சிற்பங்கள் அழகாக அமைந்துள்ளன. பராசக்தியின் ஏழு வகை உருவங்கள், ருத்திரர் பதினொருவர் உருவங்கள், அம்மை யாழ் வாசிப்பது, பிரமன் - நாமகள் திருமணம், திருமால் - திருமகள், திருமணம், பிள்ளையார் இவை நன்கு காட்டப்பட்டுள்ளன.

கருவறையைச் சுற்றியுள்ள சுவர்களில் பல சிறு பிறைகள் உள்ளன. அவற்றில் சிவனது உயர்வையும் நடனத்தையும் குறிக்கும் சிற்பங்கள் உள. சிவபெருமானுடைய பலவகை நடனங்கள் இங்குச்