பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$26 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் இதற்குமேல் சில விளக்கங்களைக் கூறுவர் அருணந்தி சிவாச்சாரியார். அவர் கூறுவது உடம்பே அறிவுடைய உயிர் எனின், உடம்பு பிணமாகி விட்டபொழுது, அதில் அறிவு காணப்படாததற்குக் காரணம் என்ன? பிணமான உடம்பில் பூதங்களின் ஒன்றாகிய காற்றுப்போல் ஆகிவிடுமாதலால் அறிவு இல்லை என்று சமாதானம் கூறினும் கூறலாம். ஆனால் உறக்கத்தில் காற்று இருக்கவும் அறிவு செயற்படவில்லை. ஆகவே, பரு உடம்பு உயிரன்று உயிர் பரு உடம்பிற்கு வேறானதாகும் என்பது . (இ) ஐம்பொறிகள் உயிர் ஆகாமை மெய், வாய், கண், செவி, மூக்கு என்னும் ஐம்பொறிகளும் ஊறு, சுவை, ஒளி, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களையும் அறிவன வாதலாலும், அவற்றை அறிபவை ஐம்பொறிகளேயன்றி வேறில்லையாதலாலும் ஐம்பொறிகளே உயிர் என்பர் இந்திரியவாதிகள். இக்கருத்தினை மறுத்து மெய்கண்டார் கூறுவது. ஐம்பொறிகளே உயிர் எனின், ஒவ்வொரு பொறி ஒவ்வொரு புலனை அறிவதன்றி, மற்றைய புலன்களை அறிவதில்லை. ஒரு பொறி அறிவதனை மற்றொரு பொறி அறிய முடிவதில்லை. அன்றியும், ஐம்பொறிகள் பிற பொருள்களை அறியுமேயன்றித் தம்மையே தாம் அறிய மாட்டா. அதாவது கண் உருவத்தை அறியும், யான் கண்” உருவத்தை அறியும் யான் கண் என்றும், 'யான் உருவத் தைக் காண்கின்றேன் என்றும் அறியமாட்டாது; அதனால் இது கண் என்றும், இஃது உருவத்தைக் காண்கின்றது என்றும் அறிய முடிகின்றதில்லை. எனவே, ஐம்பொறிகளையும் தனித் தனியே இயக்கி அவ்வைம் பொறிகளாலும் ஐம்புலன்களை அறிந்து பயன்கொள்வதாகிய ஆன்மா இவற்றின் வேறு ஆகும். ஆயின், இவர்தம் கருத்தும் ஏற்புடைத்தன்று' என்பதாகும். -