பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் -2 (பசு) 145 இன்னும், உயிர் ஒருபரமானு அளவினது எனக் கருதினால் அதனினும் பன்மடங்கு பெரியதாக உள்ள உடம்பினை அஃது எங்ங்னம் செயற்படுத்தல் கூடும்? உயிரின் அளவு அணு அளவாக இருப்பினும், அதன் ஆற்றல் உடல் முழுதும் சென்று பரவும் எனக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு கொண்டால், ஆற்றல் என்பது பொருளின் வேறன்மையால், 'உயிர், அணு என்ற வாதம் தோல்வியுற்று வீழ்கின்றது. ஆகவே, உயிருக்கு அணு பரிமாணம் கூறுதல் பொருந்தாததாகி விடுகின்றது. - (ii) உயிர் விளக்குப்போல்வது ஆகாமை: ஒரிடத் தில் ஏற்றி வைக்கப்பெற்ற விளக்கின் ஒளி பல இடங்களிலும் பரவுதல் போல், உயிர் இதயத்தில் புல் நுனிமேல் நிற்கும் பனித்துளி அளவினதாய் நிற்க, அதன் அறிவு (ஆற்றல்) உடம்பெங்கும் வியாபிக்கும் என்று கூறுவார் மிருதி நூலோர். இக் கொள்கையும் பொருந்தாது. விளக்கு துலமாய்க் காணப் படுவதும், அதன் ஒளி சூக்குமமாய்ப் பரவுவதும் வெளிப்படை அது போல உயிரின் ஆற்றல் சூக்குமமாய்க் காணப்படாத நிலையில் உடம்பெங்கும் பரவி அதன் அறிவு (ஆற்றல் இருக்க, உயிர் இதயத்தானத்தில் புல் நுனிமேல் இருக்கும் பனித்துளிபோலகட்புலனாதல் வேண்டும். கண்ணுக்குப் புலப்படாத நுண்மையுடையதெனின், வேறு எப்படியாகிலும் அஃது அகப்படுதல் வேண்டும். அதுவும் கூடாதெனின், 'உடம்பெங்கும் பரவும் என்ற ஆற்றலுக்கு, இதயத்தானத்தில் நிற்கும் என்ற உயிருக்கும் வேற்றுமை இல்லாமையால் அந்த வாதமும் தோற்றொழிகின்றது. மேலும், விளக்கொளி பரவியுள்ள இடங்களிலெல்லாம் பொருள்கள் விளங்கி நிற்றல் போல் ஐம்பொறிகளிலும் அறிவு எப்பொழுதும் தடைப்படாது நிகழ்ந்து கொண்டே இருத்தல்