பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்த சாத்திரங்கள் 3 4. சிவஞான சித்தியார் 11. கொடிக்கவி 5. இருபா இருபஃது 12. நெஞ்சு விடுதுது 6. உண்மை விளக்கம் 13. உண்மை நெறி விளக்கம் 7. சிவப்பிரகாசம் 14. சங்கற்ப நிராகரணம் என்பவையாகும். இவற்றை உந்தி களிறே உயர்போதம் சித்தியார் பிந்திருபா உண்மை பிரகாசம்-வந்தஅருள் பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு உண்மைநெறி சங்கற்பம் உற்று' என்ற வெண்பா பட்டியலிட்டுக் காட்டும். இவை பற்றிச் சிறிது விளக்குவோம். (1) திருவுந்தியார். இந்த நூலை அருளிச்செய்தவர் திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார் என்பார். இது நாற்பத்தைந்து கலித்தாழிசையால் ஆனது. சில தாழிசைகள் திருமந்திரம் போலவும், பொருள்களைப் பிசி செய்யுள் போல் மறைத்துக் கூறுவனவாயும் அமைந்துள்ளன. (2) திருக்களிற்றுப்படியார். இதனை இயற்றி அருளினவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார். இவர் திருவியலூர் உய்ய வந்த தேவநாயனாரின் மாணாக்கராகிய திருவியலூர் ஆளுடைய தேவநாயனாரின் மாணாக்கர். இது திருவுந்தியாரின் பொருளை விளக்கும் இனிய வழி நூலாக அமைந்துள்ளது. . இந்தநூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது. முதல் நூலின் ஒவ்வொரு தாழிசையின் பொருளையும் சில வெண்பாக்களாலேயே விளக்குவனவாய் அமைந்துள்ளன. இந்த வெண்பாக்கள் யாவும் இனிய தெளிவான நடையில் செல்லுகின்றன. 3. ஒரு பழம் பாடல்