பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 193 ...மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி’ என்று கூறுதல் காரிய கன்மத்தையே என்பது தெளி வாகும். இக்கூறியவற்றால் நாம் அறிய வேண்டியவை: (அ) மூலகன்மம் ஒன்றேயாய் இருக்கும்; (ஆ) காரிய கன்மம் இருவகையாக விரியும் என்பவையாகும். - செயப்படும் கன்ம வகைகள்: கன்மம், மனம், வாக்கு, காயம் என்ற மூன்றாலும் செய்யப்படும், அவற்றுள் மனத்தால் செய்யப்பெறும் கன்மம் ‘மானதம் எனவும், வாக்கால் செய்யப் பெறும் கன்மம் வாசிகம் எனவும் காயத்தால் செய்யப்பெறும் கன்மம் காயிகம் எனவும் வழங்கப்பெறும் அன்பும் அருளும் பொறுமையும் காரணமாக நினைக்கும் நல்ல நினைவுகளும், அழுக்காறும் அவாவும் வெகுளியும் காரணமாக நினைக்கும் தீய நினைவுகளுமாம். உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வே மெனல்" என்ற குறள் மனத்தால் வினை உண்டாதலைக் குறிக்கின்றது வாக்கால் செய்யப்பெறும் வினைகள் மேற்கூறிய நினைவு களின் வழிச் சொல்லப்படும் வாய்மை, பாராட்டு, இன்சொல், உறுதிச்சொல் என்னும் நற்சொற்களும்; பொய், குறளை, கடுஞ்சொல் பயனில்லாச் சொல் என்னும் தீய சொற்களுமாம். நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பிற்சொல் பல்லா ரகத்து’ என்ற குறள் வாயினால் வினை உண்டாதலைக் குறிக்கின்றது. நடுவுநிலைச் சொல் வாய்மையிலும் நடுவிகந்த சொல் 33. திருவா. சிவபுரா. அடி.31-32 34. குறள்-292 (கள்ளாமை) 35. மேலது-194 (பயனில சொல்லாமை)