பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் . 3 (பாசம்) 22] (ஈ) ஈசுரம்: ஞானசக்தி, கிரியாசத்தி இரண்டையும் சமமாகத் தொழிற்படுத்திச் சுத்த மாயையைச் சிறப்பு வகையில் நோக்கியும், சிறப்பு வகையால் சங்கற்பித்தும் நின்ற இறைவன், பின் ஞானசத்தியை மிகச் செலுத்தாது கிரியா சத்தியை மிகச் செலுத்தச் சுத்தமாயையைச் சூக்குமமாகக் காரியப்படுத்தி ஈசுரன் என்று பெயர் பெற்று நிற்பன். இந் நிலையில் சுத்த மாயை நான்காம் விருத்திப்பட்டு அவனுக்கு இடமாக அமையும் ஆகவே, ஈசுவரனுக்கு இடமாதல்பற்றி இந்நான்காம் விருத்தியே ஈசுரம் என்னும் திருப்பெயருடைய தத்துவமாய் நிற்கும். இந்நிலையில் நிற்கும் இறைவன் ‘மகே சுரன் என்றும் இத்தத்துவம் மகேசுர தத்துவம்’ என்றும் வழங்கப்பெறுதலும் உண்டு என்பதும் அறிந்து தெளியப்படும். (உ) சுத்தவித்தை கிரியா சத்தியை மிகச் செலுத்திச் சுத்தமாயையைச் சூக்குமாய்க் காரியப்படச் செய்த இறைவன், பின் ஞான் சத்தியை மிகச் செலுத்தி அதனைத் துலமாகக் காரியப்படச் செய்து வித்தியேசுரன் எனப் பெயர்பெற்று நிற்பன். இந்நிலையில் சுத்தமாயை ஐந்தாம் விருத்திப்பட்டு அவனுக்கு இடமாகும். ஆகவே, வித்தியேசுரன் என்னும் இறைவனுக்கு இடமாதல் பற்றி அவ்வைந்தாம் விருத்தியே 'வித்தை என்னும் பெயருடைய தத்துவமாய் நிற்கும். அசுத்த மாயையில் தோன்றும். வித்தை என்பதும் உளதாதலின், அதனினின்றும் வேறுபடுத்திக் காட்டுதற்கு இது சுத்த வித்தை என்றும் பெயரிட்டு வழங்கப்பெறுகின்றது. மேற்குறிப்பிட்ட ஐந்து தத்துவங்களும் சிவனால் நேரே காரியப்படுத்தப்பட்டுச் சிவனுக்கே இடமாதல் பற்றி சிவதத் துவம் எனப் பெயர் பெற்றது. சுத்தமாயையின் காரியமாய்ச் சுத்தமாய் இருத்தல்பற்றி சுத்த தத்துவம்' என்றும் வழங்கப் பெறுகின்றது. இந்நிலையில் உள்ள இறைவன் தடத்த சிவன்