பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் அவருக்கு இந்த மலம் இன்றி இதன் வாசனை மாத்திரமே உள்ளது. இங்ங்னம் இவர் உயிர்வருக்கத்தினராய் மலவாசனை நீங்காது நிற்றலின் அசுத்தமாயையாகிய தூலப்பொருளை இறைவன் இவர் வழியாகச் செயற்படுத்துகின்றான். இறைவன் அனந்ததேவர் வழியாக அசுத்தமாயையைச் செயற்படுத்தத் திருவுளம் பற்றுதலால், இவருக்கு அதற்கேற்ற அறிவும் ஆற்றலும் உள்ளன என்பது சொல்லாமலே விளங் கும். இவற்றால்இவர் பிரளயாகலர், சகலர் என்னும் இருவகை உயிர்களின் வினைவகைகளை அறிந்து அவற்றிற்கேற்ப அசுத்தமாயையைக் காரியப்படுத்துவர். அசுத்தமாயையினுள் தோன்றும் தத்துவங்கள் ஏழு. அவை காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்பனவாகும். இந்த ஏழையும் அனந்தர் என்னும் வித்தியேசரர் வாயிலாகச் செயற்படுத்துதலால் இவை வித்தியாதத்துவம் எனப் பெயர் பெறுகின்றன. மாயை' என்பது ஒரு காரணம் பற்றி இறுதிக்கண் வைத்து வழங்கப் பெறினும், இதுவே முதல் தத்துவமாகும். அசுத்த மாயையின் ஒரு பகுதி அனந்த தேவரால் ஏனைய தத்துவங்கள் தோன்றுதற்குத் தகுதியாகச் செய்யப்பெற்றது. இது மோகினி எனவும் வழங்கப்படும். மோகினி - மோகிக்க - மயங்கச் செய்வது. இதனினின்றுதான் மேற்குறிப்பிட்ட ஏழு தத்துவங் களும் தோன்றுகின்றன. தோன்றும் முறை: சுத்த மாயையின் காரியங்கள் ‘விருத்தி எனவும் அசுத்தமாயையின் காரியங்கள் பரிணா மம் எனவும், இந்தப் பரிணாமமும் ஒரு புடைப்பரிணாமமே எனவும் முன்னர் மொழியப்பட்டதை ஈண்டு நினைவு கூர்தல் தகும். அசுத்தமாயையின் ஒருபுடைப் பரிணாமமாகிய மாயா தித்துவத்தினின்றும் காலம் என்னும் தத்துவம் தோன்றும்.