பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் திரை தோன்றும். அதன்பின் சத்தத்தோடு பரிசம் கூடப் பரிச தந்மாத்திரை தோன்றும் அதன்பின் உருவ தந்மாத்திரையும், அதன்பின் இரத தந்மாத்திரையும், அதன் பின் கந்த 'தந்மாத்திரையும் முன்பின் தோன்றிய குணங்களோடு கூடியே தோன்றும். ஆகவே, இம்முறையில் நோக்கும்பொழுது சத்த தந்மாத்திரை ஒன்றே கேவலம்’ என்றும் ஏனைய நான்கும் ‘விசிட்டம் என்றும் தெளிவாகின்றதன்றோ? பிறிதோர் உண்மை காரியத்தில் உள்ளது காரணத்தி லும் உளதாகும் என்பதை நாம் அறிவோம். எனவே, பூதங்களில் பலவகை வேறுபாட்டோடு துலமாய்க் காணப்படும் முறைகள் அப்பூதங்கட்குக் காரணமாகிய தந்மாத்திரையிலும் வேறுபாடின்றிச் சூக்குமமாய்க் கிடத்தல் வேண்டும். அவ் வாறில்லையேல் ஒரோவொரு குணமேயுடையவற்றினின்று இரண்டு, மூன்று, நான்கு ஐந்து என்னும் குணங்களுடையவை தோன்றதல் கூடாது. ஆதலால் இவற்றிற்குத் தந்மாத்திரை என்னும் பொருந்துமாற்றை முன்பே விளக்கியுள்ளோம். ஆகவே சத்தம் ஒழிந்த ஏனைய தந்மாத்திரைகள் நான்கும் கேவலமாகாது விசிட்டமேயாகும் என்பது உணர்ந்து தெளியப் படும். ஆகாயம் சத்த குணம் ஒன்றேயுடைமையின், அது கேவவலமாய் நிற்கும். சத்த தந்மாத்திரையினின்றும் தோன்று தல் கூடும் என்பதும் அறியப்படும். - - இக்கூறியவற்றால் தந்மாத்திரைக்கும் பூதங்கட்கும் உள்ள வேற்றுமை முளையும் மரமும் போல சூக்குமமும் துலமுமாம். அவ்வளவே வேறில்லை. எனவே, பூதாதியகங்காரத்தினின் றும் தந்மாத்திரைகள் மேற்கூறியவாறு தோன்றியபின் முதற் கண் சத்தத் தந்மாத்திரையினின்றும் ஆகாயமும், அதன் பின்னர் பரிசத் தந்மாத்திரையினின்றும் தேயுவும், அதன்பின் இரதத் தந்மாத்திரையினின்றம் அப்புவும், அதன்பின்னர் கந்த