பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் . 3 (பாசம்) 253 (ஏ) உடம்பின் வகைகள் தத்துவங்கள் முப்பத்தாறும் ஆன்மாக்களுக்கு உடம்புகளாகப் பரிணமித்து நிற்கும். அவை 'துலம், சூக்குமம், பரம் என்று மூவகைப்படும். பரம் - அதி சூக்குமம். பூதங்கள் ஐந்து, கன்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து. ஆகப் பதினைந்து தத்துவங்களும் துலசரீரமாய் நிற்கும். தந்மாத்திரைகள் ஐந்து, அந்தக்கரணங் களுள் மனம், அகங்காரம், புத்தி என மூன்று ஆக எட்டும் சூக்கும, சரீரமாய் நிற்கும். எட்டுத்தத்துவங்கள் ஆயினமை பற்றிச் சூக்குமசரீரத்தை 'பரியட்டக சரீரம் என்று வழங்குத லும் உண்டு. அந்தக்கரணங்களுள் சித்தமாக நிற்கும் குண தத்துவம் ஒன்று, வித்தியாதத்துவங்கள் ஏழு, ஆக, எட்டு தத்துவங்களும் பரசரீரமாகும். மூலப்பிரகிருதி குணதத்துவத் தின் வேறாகாமை அறியப்படும். பரசரீரத்துள் குண தத்துவம் முக்குணங்களாய் நிற்றலின் குணசரீரம்’ என்றும், காலம், நியதி முதலிய ஐந்தும் உயிர்கட்குச் சட்டைபோல் அமைதலின் கஞ்சுக சரீரம்" என்றும், மாயாதத்துவமே ஏனைய தத்துவங்கட்குக் காரணமாக அமைதலின் அது காரணசரீரம் என்றும் வழங்கப்படும். சிவதத்துவம் ஐந்தும், சகலர் பிரளயாகலர்க்கு உடம்பாய் வருதல் இல்லை. இவற்றுடன் சூக்கும துல சரீரங்களையும் கூட்டி, துல சரீரம், சூக்கும சரீரம், குணசரீரம், கஞ்சுக சரீரம், காரணசரீரம் என சரீரத்தை ஐந்தாகக் கூறுதலும் உண்டு. ஐந்தும் சரீரங்களும் ஐங்கோசங்கள் என வழங்கப்பெறும். (ஐ) ஐங்கோசங்கள்: இன்னவை எனக் காட்டப்பெறு கின்றன. தூலசரீரம் சோறும் நீரும் முதலிய உணவினால் நிலை பெறுவதாதலின் அன்னமயகோசம் எனப்படுகின்றது. சூக்கும சரீரம் பிராணவாயுவின் இயக்கத்தால் செயற்படுதலின் அது பிராணமய கோசம் என வழங்கப்பெறுகின்றது.