பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் குணசரீரம் அந்தக் கரணத்தில் ஒன்றாகிய சித்தமாய் நிற்றலின் ‘மனோமய கோசம்’ எனப்படுகின்றது. கஞ்சுக சரீரம் ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களை விளக்கி நிற்றலின் அது விஞ்ஞான கோசம்’ என மொழியப் பெறுகின்றது. காரண சரீரம் கேவலத்தில் மூடமாய்க் கிடந்த ஆன்மாவிற்குச் சிறிது விழிப்பைத் தந்து மயக்கி ஒருவகைக் களிப்பை உண்டாக்குதலின் அஃது ஆனந்த மயகோசம்’ என்று சொல்லப்படுகின்றது. கோசம்- சட்டை (ஒ) தாத்துவிகங்கள். தத்துவங்களின் கூறுகளும் காரியங்களும் தாத்துவிகங்கள் எனப்படும். இவற்றின் தொகை அறுபது ஆகும். இவற்றையும் தத்துவங்கள் முப்பத்தாறுடன் சேர்த்துப் பொதுவாக தொண்ணுற்றாறு தத்துவங்கள் என்று வழங்குவர். இவற்றின் விளக்கம்: பிருதிவியின் கூறு எலும்பு, தசை மயிர், தோல் நரம்பு’ என்னும் ஐந்து, அப்புவின் கூறு சிறுநீர், குருதி, சிலேத்துமம், வியர்வை, சுக்கிலம் (அல்லது சுரோணிதம்) என்னும் ஐந்து, தேயுவின் கூறு இதயத்தில் வெப்பம், பசித்தீ கண்ணில் வெப்பம், உடம்பில் வெப்பம், பைத்தியம் என்னும் ஐந்து: வாயுவின் கூறு 'உதானன், பிராணன், அபானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருதரன், தேவதத்தன், தனஞ் செயன்' என்னும் பத்து, ஆகாயத்தின் கூறு அத்தி, அலம் புடை இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, குசூதை சங்கினி, சிகுவை, புருடன் என்னும் நாடிகள் பத்து, ஞானேந்திரியங்களின் விடயங்கள் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து, கன்மேந்திரியங்களின் விடயங்கள் ‘வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம் என்னும் ஐந்து, அகங்காரத்தின் கூறு தைசதம், வைகாரிகம், பூதாதி” என்னும் மூன்று; காமம், குரோதம், உலோபம், மோகம், மதம்’