பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 269 பாகமாம் வகைநின்று திரோதாயி சத்தி பண்ணுதலான் மலம்எனவும் பகர்வர்; அதுபரிந்து நாகமா நதிமதியம் பொதிசடையான் அடிகள் நணுகும் வகை கருணைமிக நயக்குந் தானே" எனவும், முற்-சினமருவு திரோதாயி கருணை யாகித் திருந்தியசத் திநிபாதம் திகழு மன்றே" எனவும் திரோதான சக்திமலத்தின் இயல்புகளைச் சிவப்பிர காசம் இனிது விளக்குதல் காணலாம். மலங்களுள் ஆணவமே முதலாவது. அஃது உயிர் கட்குச் செம்பிற்குக் களிம்பு போல இயற்கைக் குற்றமாய், உயிர் என்று உண்டோ அதனோடு உளதாயிற்று என்பது நமக்குத் தெரியும். நோய்போல் உள்ள ஆணவமலம் உயிர்கட்கு இயற்கையாய் இருப்பதால் அதற்கு மருந்து போல் உள்ள கன்ம மாயைகளும் அவ்வாணவமலம் காரணமாக உயிர்கட்கு அன்றே உளவாயின. இஃது அரிசி என்று உண்டோ அன்றே அதற்கு உமியும் தவிடும், முளையும், இருத்தல் போன்றது என்று விளக்குவர் சித்தாந்த ஆசிரியர்கள். மும்மலம் நெல்லி னுக்கு முளையொடு தவிடு மிப்போல் மம்மர்செய் தணுவின் உண்மை வடிவினை மறைத்து நின்று பொய்ம்மைசெய் போக பந்த போத்திருத் துவங்கள் பண்ணும் 88 சிவப்பிரகாசம்-20 89. மேலது.-48