பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் 28] வீழ்ச்சி சத்தி - பதிதல் என்று சொல்லாமல் சத்தி வீழ்தல்' எனக் கூறியதன் கருத்துதான் யாது? ஒர் அவையிடை திடீரென்று ஒரு கல் விழுமாயின், அங்குள்ளாருக்கு ஒர் அதிர்ச்சியை உண்டாக்குமன்றோ? அங்ங்னமே திரோதான சக்தி அருட்சக்தியாகப் பதியும் பொழுது அப்பதிவு ஆன்மா விற்கு உலகியலில் ஓர் அதிர்ச்சியை உண்டாக்கும். இது பற்றியே இந்நிலை சத்தி நிபாதம் என வழங்கப்பெற்றது என்பது அறியப்பெறும். உலகியலில் உயிர்கள் தீயன செய்யாது நல்லன செய்யக் கருதுதல் சத்தி நிபாதம் வழி நிகழ்வதேயாகும் என்பதும் தெளியப்படும். அரசன் ஆணைக்கு அஞ்சியேனும், தம் சொந்த நலன் கருதியேனும் செய்யும் நல்வினைகள் மனத்தொடு பொருந் தாமையின் அது மல சக்தியின் காரியம் ஆவதேயன்றிச் சத்தி நிபாதத்தால் ஆவதன்று. அன்பும் அருளும் பற்றிச் செய்யும் நல்வினைகள் யாவும் சத்தி நிபாதத்தால் ஆவனவாகும். ஆயினும், கடவுட்கொள்கையின்றிச் செய்யப் பெறுமாயின், அவை பிறவி நீங்கும் வழியாகா. ஆகவே, அவையும் மலச்சக்தியின் காரியமாகவே முடியும் என்பதும் ஈண்டு உளங்கொள்ளத்தக்கது. சத்தி நிபாதம் நிகழும் முறைகள் மேற்குறிப்பிட்ட மலபரிபாகம் பல்வேறு வகைப்பட நிகழுமாதலின், அவற்றிற் கேற்பச் சத்தி நிடாதமும் பல்வேறு வகைப்பட நிகழும் என்று சித்தாந்த நூல்கள் பகரும். அவை மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் எனப்பெரும்பான்மையாக நான்கு வகைப்படுத்திக் கூறப்பெறும். ஏனைய பலவற்றையும் மந்ததரத்தில் மந்தரதரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்றாற்போல் ஒவ்வொன்றிலும் நந்நான்காகவும், பின்பு அவற்றுள்ளும் ஒவ்வொன்றும் நந்நான்காகவும் பலபடவிரித்துக் கூறுவர். மந்த தரம் முதலிய