பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 383 உள்ளத்தில் உயர்வும் தாழ்வும் ஏற்படுகின்றன. வள்ளுவப் பெருந்தகையும் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்று கூறிப்போந்தார். நல்லெண்ணத்தை வளர்ப்பதே ஆலயவழி பாட்டின் உயிரிய நோக்கம் என்பது அறியப்படும். அலங்காரம்: மூர்த்தியை முழுக்காட்டிய பிறகு அவரை ஆடை ஆபரணங்களாலும் அலங்கரிக்கின்றோம். நம் உடல் வாழ்க்கையை எங்ங்னம் ஒம்புகின்றோமோ அதே கோட்பாட்டைத் தெய்வத்தின்கண் காண அன்பர்கள் முயலுகின்றனர் என்பது கோட்பாடு; தெய்வத்திற்கு உணவும் உடையும் தேவையானவை அன்று என்பதையும், இவை அனைத்தையும் கடந்த நிலையில் இருப்பது பரம்பொருள் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் இவற்றையெல்லாம் ஏற்று அங்கீகரித்து மகிழ்வற்றிருக்கும் மூர்த்தியாக பக்தன் தெய்வத்தைப் பற்றிக் கருதுகின்றான்." அதன்மூலம் அவனது மனம் மகிழ்ச்சி அடைகின்றது. இதுவே ஆலய வழிபாட்டின் பயனாகும். நைவேத்தியம்: மூர்த்திக்கு அலங்காரம் ஆனபிறகு அவருக்கு இனிய உணவு நைவேத்தியமாகப் படைக்கப் பெறுகின்றது. இறைவன் இதனை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளுகின்றான் என்றே அன்பன் உணர்கின்றான். ஆன்மசாதனத்தில் முன்னேற்றமடைகிறவர்கள் உணவை நைவேத்தியமாகப் படைப்பதால் பொருள்மிக உண்டு என்று உறுதி கூறுகின்றனர். இதற்கு ஆலயவழிபாடு செய்து வந்த இராமகிருட்டினரே சிறந்த சான்றாக அமைகின்றார். அன்புடன் ஆண்டவனுக்குப் படைக்கப்பெறும் நைவேத்தி 9. குறள்-536 10. நம்பியாண்டார் நம்பி பொல்லாப்பிள்ளையாருக்கு மோதகம் வைத்து வணங்கியதும், பிள்ளையார் அதனை ஏற்றுக் கொண்டதும் நினைவுகூரத்தக்கவை