பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 43 உலகத்தைச் செயற்படுத்துவதில் பல கடவுளர் (நான்முகன், திருமால், உருத்திரன்) இருப்பினும், அவர்கள் அனைவரும் ஒருவன் வழி நின்று அவன் திருவுளத்தின்படி தத்தம் தொழில்களைப் புரிவர். எல்லோரும் முதற்கடவுள் ஆகார். ஆகவே, (iv) உலகிற்கு முதல்வன் ஒருவனேயற்றிப் பலர் இல்லை என்பது தெளிவு. - - (3) சங்கரகரகனே முதற்கடவுள் (அ) வேதத்தில் பல கடவுளர் சொல்லப்பெறினும் முடிவு கூறுமிடத்தில் கடவுள் ஒருவனே' என்று கூறுவதைக் காணலாம். - (ஆ) () ஒவ்வொரு தொழிலையன்றி எல்லாத் தொழில் களையும் செய்யவல்லவனாய் எல்லா முதன்மையும் உடைய வனே முதற்கடவுள் அவ்வாறில்லாமல் ஒவ்வொரு தொழிலை மட்டிலும் செய்யவல்லவராய், அத்தொழிலில் முதன்மை பெற்று, அவ்வத் தொழில்கட்கு மட்டிலும் உரியவராயிருப்பவர் கள் முதற்கடவுளின் அருள்வழி நிற்கும் தொழில் கடவுளர் ஆவார். (ii)படைத்தற் கடவுளும் காத்தற் கடவுளும் தாம் தாம் ஏனைய இருவரையும் படைத்தலும் காத்தலும் செய்வர் எனக் கூறின் பொருந்துவதாகும். ஆயினும் ஏனைய இருவரையும் அழிப்பர் எனக் கூறின் அது பொருந்தாத கூற்றாகும். ஏனெனில், படைப்பவனுக்கும் காப்பவனுக்கும் அழிப்பது தொழிலோடு எவ்வாற்றானும் இல்லை. இனி, அழித்தல் கடவுளுக்கு அவ்வாறின்றி, அழிப்புக் காலத்தில் எல்லாப் பொருள்களோடுங் கூட, ஏனைய இருவரையும் கூட அழிப்பன் என்றே கூறுதல் வேண்டும். ஏனெனில், அழிப்பின்