பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குரு

குறை


குரு - இறையுணர்வை உணர்த்தவல்ல சான்றோர். ஞானகுரு, கிரியாகுரு என இருவகையினர். முன்னவர் இறை அறிவையும் பின்னவர் இறை கிரியையும் உணர்த்துபவர்.

குரு சந்தானம் - குரு பரம்பரை. பா.சந்தானம்.

குருநாதன் - 1.இறைவன். 2.மெய்கண்டார்.

குருவழிபாடு - குருவை வணங்கும் முறை. மன,மொழி, மெய்களால் வணங்குவதற்குரிய சிவ வடிவமாக இருப்பவர் குரு. ஆன்மீகத் தெளிவு அளிப்பவர். நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி. ஆகவே, அவரை வழிபடல் சிவனை வழிபடுவதாகவே அமையும்.

குருளை - முருகன், மகன்.

குலச்சிறை நாயனார் - மணமேற்குடி - பாண்டிய நாடு. சிவ பத்தர். குருவழிபாடு (63).

குலாலன் - 1.குயவன். எ-டு 1.மண்ணினில் கடாதி எல்லாம் வருவது குலாலனாலே (சிசிபப.49) 2. குலாலன் தண்ட சக்கரம் நிமித்த காரணன்.

குலிசம்-இடியேறு, வச்சிராயுதம். எ-டு குறிகுலிசம்.

குவலயம் - உலகம்.

குவை - நிதி, கூட்டம், தொகுதி, பொற்குவை, எ-டு குவைதரு நவமணி.

குழப்பு - குழப்பம் செய்.

குழப்பு நூல்- வேதாகமங்களுக்குப் புறம்பான பாஞ்ச ராத்திரிகள் நூல். திருமால் அஞ்ஞானமயமாய் அஞ்ஞானத்தோடு கூடிய ஆன்மாவுமாய் நிற்பான் என்னும் பாஞ்சராத்திரிகள் கூற்று. இதனை நூல் என்று உயர்ந்தோர் கொள்ளார். (சி.சி.ப.ப.295).

குழலினார் - கூந்தல் அழகிகள். எ-டு வாசமர் குழலினார்கள். (சிசிபப 29)

குழு - தொகுதி, கூட்டம். எ-டு செறியப் பெற்றேன் குழுவில் சென்று (திப99) பா.ஐம்பெருங்குழு.

குளிகை - மாத்திரை.

குற்றம்-ஆக இருவகை 1.காமம், வெகுளி, மயக்கம் 2. காமம், குரோதம், உலோகம், போகம், மதம்.

குற்றவீடு - குற்றத்திலிருந்தும் நீங்குதல், அராகம் ஆதி குணங்களைக் குறைத்தலாகும்.

குறி - 1.இலிங்கம் 2.கருதுதல் 3.மதங்களின் குறிகளும் குணங்களும் 4.அருவம், உருவம், அருஉருவம் என்னும் தடத்தக்குறி.

குறி இறந்த- குறிகடந்து அறிகுறி இல்லாத,

குறிகள்- அடையாளங்கள். எ-டு இலிங்கம், திருநீறு, உருத்திராக்கம், இராமம்.

குறிகுலிசம் - குறியான வச்சிராயுதம் எ-டு குறிகுலிசம் கோகனதம் கொள் சுவத்தி (உவி.7) பா. பூத வடிவம்.

குறிப்பு - பஞ்ச கந்தங்களும் ஐம்பொறிகளும் மணமுமாகிய ஆறன் தொழில்.

குறிப்பு ஏது - வெளிப்படாமல் குறிப்பாக ஏதுப்பொருள் பட நிற்பது.

குறிப்பு மொழி - குறிப்பினால் பொருள் உணர்த்தும் மொழி.

குறை - 1.குற்றம் 2.இன்றியமையாமை

96