பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிற்றல்

நீர்மை


நிற்றல் - நிலைத்து வாழல்.

நின்பவனி - சிவன் வலம் வருகை.

நின்பவனி ஆதரித்தார் - ஆர்ப்பாட்டம் செய்து வந்த யானையைக் கொன்று ஐராவதத்தின் மேல் வலம் வந்த சிவனை எல்லோரும் தொழுது உளங்கொள வரவேற்றனர்.

நின் பிரமிதா - ஆன்ம அறிவு ஆகிய பிரமிதா.

நின்பெறல் - நின்னை அடைதல்.

நின்மல சாக்கிரம் - சுத்த அவத்தையின் முதல் நிலை. இதில் ஆன்மா சிவன் அருளால் சத்தாதிப் பொருள்களைச் சிவாகாரமாகவும் சிவ ஆனந்தமாகவும் நுகரும் நிலை.

நின்மல சுழுத்தி - சுத்த அவத்தையின் மூன்றாம் நிலை. ஆன்மா, ஞாதுரு, ஞானம், ளுேயம் என்னும் வேறுபட்ட அறிவுடன் அருள்மயமாகி இன்பத்தை நுகர்வது.

நின்மல சொப்பனம் - சுத்த அவத்தையின் இரண்டாம் நிலை. அருளிடத்தே ஆன்மா நின்று அதனை உணரும் நிலை.

நின்மல துரியம் - சுத்த அவத்தையின் 4 ஆம் நிலை, ஆன்மாவின் மலம் நீங்க, அதற்கு ஆனந்த ஒளி தோன்றும் நிலை.

நின்மல துரியாதீதம் - சுத்த அவத்தையின் 5ஆம் நிலையான இறுதிநிலை. ஞாதுரு, ஞேயம் என்னும் வேறுபாட்டையடைந்து, ஆன்மா ஆனந்தமயமாகி விளங்கும் நிலை.

நின்மலன் - மலமில்லா இறைவன்.

நின்றசீர் நெடுமாற நாயனார் - அரசர். மதுரை- பாண்டிநாடு.சோழ மன்னன் மகள் மங்கையற்கரசியாரை மனைவியாகப் பெற்றவர். இவர்தம் அமைச்சர் குலச்சிறையார். இவ்வரசர் சமணராய் இருந்து வெப்பு நோயால் துடித்தவர்.திருஞான சம்பந்தரால் இவர் வெப்பு நோய் நீங்கப் பெற்றவர். சைவம் தழைக்கச் செங்கோலோச்சியவர். குருவழிபாடு (63).

நின்றவர் - தாம் அடங்கி இறைவன் பின் நின்றவர்.

நின்று - வேறு நிற்றல்.

நினைப்பு - எண்ணம், அறிவு.

நினைப்பு மறப்பு - இலாடத்தே ஆன்மா எய்தும் ஐந்தவத்தை.

நீ

நீ - இறைவன் (முன்னிலைப் படுத்தல்) ஒதே.

நீக்கம் - பிரிவு.

நீக்கமின்றி - இரண்டற, சமவேதமாய்.

நீங்காமை - தாதான்மியம்.

நீத்தார் - சமணர்.

நீத்தோர் - நீங்கியவர். எ-டு அவ்வறிவினராய் வாழ்ந்திருப்பவர் நீத்தோர்கள் (திப 32) நீதிமுறைமை, ஒழுக்கம், தருமம், அறம், எ-டு நீதியினில் நிற்பன நடப்பனவும் (சிசிபப 16)
நீதியார் - புத்தர்.

நீதியார் வேதநூல் - பிடக நூல்.

நீர்க்கூறு - அப்பு சிறுநீர், இரத்தம், சிலேத்துமம், வியர்வை, சுக்கிலம்

நீர் மூன்று - மூன்று நீர்,கடல் நீர்.

நீர்மை - ஒளி, தன்மை, இயல்பு. எ-டு தெள்நீர்மையாய் இதனைச் செப்பு (திப 6)


171